முட்டாள்தனமான அறிவாளிகள்.. என்ன ரஜினி கருத்துக்கு செந்தில் குமார் எம்பி இப்படி பதில் சொல்லிட்டாரே!
தமிழ்நாட்டில் 5000 த்திற்கும் குறைவான ( முட்டாள்தனமான) அறிவாளிகள் தான் உள்ளார்கள் என்று ரஜினியின் பேச்சுக்கு தர்மபுரி எம்பி செந்தில் குமார் பதில் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழ்நாட்டில் 5000 த்திற்கும் குறைவான ( முட்டாள்தனமான) அறிவாளிகள் தான் உள்ளார்கள் என்று ரஜினியின் பேச்சுக்கு தர்மபுரி எம்பி செந்தில் குமார் பதில் அளித்துள்ளார்.
சென்னையில் துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. அதில், சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் தற்போது அதிகம் வேண்டும். பத்திரிக்கைகள் நடு நிலையுடன் செயல்பட வேண்டும். உண்மையில் பொய் என்ற தண்ணீரை கலக்க கூடாது. எது பால், எது தண்ணீர் என்று பத்திரிக்கையாளர்தான் சொல்ல வேண்டும்.

பத்திரிக்கை துறை தற்போது சரியாக இல்லை. முரசொலி வைத்திருந்தால் அவரை திமுககாரர் என்று சொல்லிவிடலாம்,கையில் துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லிவிடலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
அப்போ அவர் சொல்ல வருவது தமிழ்நாட்டில் 5000 த்திற்கும் குறைவான ( முட்டாள்தனமான) அறிவாளிகள் தான் உள்ளார்கள் என்று.😉 pic.twitter.com/UbDXjdffdF
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) 14 ஜனவரி, 2020
இந்த நிலையில் நடிகர் ரஜினியின் கருத்துக்கு எதிராக இணையத்தில் பலரும் விமர்சனம் வைத்து வருகிறார்கள். திமுகவினர் பலர் ரஜினியின் கருத்தை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளனர். நாளைக்கு பொங்கல் வைப்பதற்காக பதிலாக ரஜினிக்கு எதிராக இன்றே திமுகவினர் பொங்கல் வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், திமுக தர்மபுரி எம்பி செந்தில் குமார் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், அப்போ அவர் சொல்ல வருவது தமிழ்நாட்டில் 5000 த்திற்கும் குறைவான ( முட்டாள்தனமான) அறிவாளிகள் தான் உள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications