கரூர் கேஸ்! விஜயுடன் சேர்த்து செந்தில் பாலாஜிக்கும் சம்மன்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை! ஷாக் மேல் ஷாக்
சென்னை: திமுகவின் கரூர் மற்றும் கோவை மாவட்டங்களின் பொறுப்பாளரும், மாஜி அமைச்சருமான செந்தில்பாலாஜியிடம், முதல்வர் ஸ்டாலின் சொன்ன ஒரு வார்த்தையால் பதறிப்போயிருக்கிறார் என்கிறார்கள் அறிவாலயத்தார்.
கரூர் உயிர்பலி தொடர்பாக 10-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. அனுப்பிய சம்மனுக்கு த.வெ.க. தலைவர் விஜய் விலக்குப் பெற்றிருக்கும் நிலையில், செந்தில்பாலாஜிக்கு இதே விவகாரத்திற்காக சம்மன் அனுப்பியிருக்கிறது. கரூர் சம்பவத்தில் செந்தில்பாலாஜிக்கு எந்த நேரத்திலும் சம்மன் அனுப்பி டெல்லிக்கு அவரை சி.பி.ஐ. வரவழைக்கும் என்கிற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடமும், திமுகவினரிடமும் இருந்து வந்தது. ஆனால், சம்பவம் நடந்த பல மாதங்களாகியும் அந்த சம்மன் வராததால், இனி வராது என நிம்மதியாக இருந்து வந்தார் செந்தில் பாலாஜி. ஆனால், தற்போது அவரது நிம்மதியை குலைத்திருக்கிறது சி.பி.ஐ. !

செந்தில் பாலாஜி சிபிஐ சம்மன்
ஆம்...செந்தில்பாலாஜிக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அதனை வாங்க மறுத்ததுடன் வழக்கறிஞர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் செ.ப.! தேர்தல் நெருங்கும் நிலையில் தனக்கு சம்மனா? என அதிர்ச்சியடைந்துள்ள செந்தில்பாலாஜி, முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே சொன்ன ஒரு வார்த்தை அவரிடம் மீண்டும் மீண்டும் எதிரொலிப்பதால் அந்த அதிர்ச்சியும், சம்மன் அதிர்ச்சியும் சேர்ந்து அவரை அப்-செட்டாக்கியிருக்கிறது என்கிறார்கள் திமுக உடன் பிறப்புகள்.
அதென்ன ஸ்டாலின் சொன்ன வார்த்தைகள் ? என திமுக வட்டாரங்களில் விசாரித்த போது, ''மூன்று நாட்களுக்கு முன்பு ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்களையும் தொடர்பு கொண்டு, மாவட்டத்திலுள்ள தொகுதிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது? இந்த பகுதி களில் வீக்காக இருப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட் தந்துள்ளது...அந்த பகுதிகளை கவனியுங்கள் என உத்தரவு பிறப்பித்துக்கொண்டிருந்தார்.
நீங்கள் கோவையில் போட்டி
அந்த வகையில் செந்தில்பாலாஜியிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், கரூர் மற்றும் கோவை மாவட்ட நிலவரங்களைக் கேட்டறிந்தவர், ஒரு கட்டத்தில், 'இந்த முறை நீங்கள் கோவையில் போட்டியிடுங்களேன். எந்த தொகுதின்னு நீங்களே சொல்லு ங்கள். வேலுமணியை எதிர்க்கும் வலிமையான கேண்டிடேட் நீங்க தான். நீங்க போட்டியிட்டால் கோவையின் அனைத்து தொகுதிகளிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமே' என்றெல்லாம் சொல்ல, 'தலைவரே, கோவை வேண்டாம் தலைவரே...' என பதறிப் போய்ட்டாராம் செந்தில் பாலாஜி.
கரூர் செந்தில் பாலாஜி
கரூர் மாவட்டத்தில் திமுகவினர் யார் நின்றாலும் அவர்களை ஈசியாக ஜெயிக்க வைத்து விடுவார் செந்தில்பாலாஜி. அந்த மாவட்டத்தை பொறித்தவரை, எந்த கவலையும் இல்லை. ஆனால், கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளில் அதிமுகவே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதற்கு காரணம், அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான். கரூர் எப்படி செந்தில்பாலாஜியின் ஆளுகை யில் இருக்கிறதோ...அதேபோல, கோவை மாவட்ட தொகுதிகள் வேலுமணியின் ஆளுகையில் இருக்கின்றன.
இந்த தேர்தலில் அதனை உடைக்க வேண்டும் என்பது தான் முதல்வர் ஸ்டாலினின் விருப்பம். அதனால்தான், கோவை மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் செந்தில்பாலாஜி, கோவையில் போட்டியிட்டால், அந்த தாக்கமே 10 தொகுதிகளிலும் எதிரொலிக்கும். வேலுமணியின் ஆதிக்கத்தைக் குறைக்க முடியும். செந்தில் பாலாஜியின் ஃபீல்ட் வொர்க்கால் 10 தொகுதிகளிலும் திமுகவை ஜெயிக்க வைக்க அவரால் முடியும் என முதல்வர் ஸ்டாலின் யோசித்திருக்கிறார். அதனால் தான், கோவையில் போட்டியிடுங்களேன் என செந்தில் பாலாஜியிடம் சாதாரணமாகக் கேட்டிருக்கிறார் முதல்வர். வேறு எதுவும் இல்லை'' என்று சுட்டிகாட்டுகிறார்கள் திமுக உடன்பிறப்புகள்.
- சிறப்பு நிருபர் எழில்
-
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
கோவையின் இதயப் பகுதியில் ஏற்பட போகும் மாற்றம்.. செந்தில் பாலாஜி ஷார்ப் திட்டம் -
கோவை தெற்கில் ஒவ்வொரு வார்டிலும் 3 பட்டிகள்.. செந்தில் பாலாஜி மீது அதிமுக பரபரப்பு புகார் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications