சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி .. திங்கள், வெள்ளி, சனிக்கிழமை நிபந்தனை தெரியுமா?
சென்னை: உச்சநீதிமன்ற நிபந்தனையின் படி, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வெள்ளிக்கிழமையான இன்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்னை அமலாக்கத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் என்று நிபந்தனை விதித்து இருந்தது.
2011-2016 கால அதிமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கித்தருவதாக கூறி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான புகார்களின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி.

திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி கடந்த 2021-ம் ஆண்டு கரூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அத்துடன் வியூகம் காரணமாகவே கரூர் மாவட்டத்தில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியை தழுவியதாகவும் பேசப்படட்து. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும் 2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற செந்தில் பாலாஜியின் வியூகம் என்று பாராட்டிய திமுக தலைமை, அவருக்கு தமிழக அரசில் மதுவிலக்கு, ஆயத்தீர்வை மற்றும் மின்வாரிய துறை அமைச்சராக பதவி கொடுத்து அழகு பார்த்தது. மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை என்பது மிகவும் பவர்புல் அமைச்சர் பதவியாகும். இதனால் செந்தில் பாலாஜியின் அசுர வளர்ச்சியை கண்டு அப்போது அரசியலில் பலர் வாயடைத்து போனார்கள்.
இதனிடையே மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனு செய்தார் அந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனிடையெ மீண்டும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த செந்தில் பாலாஜியின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அவருக்கு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உள்ளது.
ஊழல் வழக்குகளின் அரசு தரப்பு சாட்சிகளையோ, பாதிக்கப்பட்ட நபர்களையோ நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொள்ளக் கூடாது. ஊழல் வழக்கிலும் அல்லது பண மோசடி வழக்கிலும் இவ்வாறு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொண்டாலோ அல்லது தொடர்பு கொள்ள முயற்சி செய்தாலோ ஜாமீன் ரத்து செய்யப்படும். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்னை அமலாக்கத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
ஊழல் வழக்குகளை விசாரித்து வரும் மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமை செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும். அவர் தனதுபாஸ்போர்ட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பதிவு செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்குகளின் விசாரணை நடைபெறும் நீதிமன்றத்திலும், பணமோசடி வழக்கு நடைபெறும் சிறப்பு கோர்ட்டிலும் செந்தில் பாலாஜி தவறாமல் ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி. வெள்ளிக்கிழமையான இன்று காலை 11 மணி அளவில் சென்னை அமலாக்கத்துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அங்கு கையெழுத்திட்டு சென்றார். இதேபோல் வரும் திங்கள் அன்றும் ஆஜராக வேண்டும். இதேபோல் வரும் அக்டோபர் 5ம் தேதி மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால், போக்குவரத்து ஊழல் வழக்குகளை விசாரித்து வரும் தமிழக போலீசார் மத்திய குற்றப்பிரிவு விசாரணை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications