செந்தில் பாலாஜி முகத்தில் வந்த திடீர் மாற்றம்.. நீதிமன்றம் வரும்போது கவனித்தீர்களா?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று முகத்தில் சவரம் செய்து கொண்டு கிளீன் ஷேவில் சற்று பிரிஸ்க்காக வந்திருந்தார். ஆனாலும் அவரது நம்பிக்கை பொய்த்து போகும் அளவுக்கு அவரது நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கில் ஜூன் 14ல் கைதான செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 150 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை, 3 ஆயிரம் பக்கத்திலான ஆவணங்களை டிரங்கு பெட்டியில் கொண்டு வந்து அமலாக்கத்தையினர் தாக்கல் செய்தனர்.

அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து புழல் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட செந்தில்பாலாஜி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்பதால், அதற்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தினார்.
அமலாக்கத்துறை தாக்கல் செய்த 150 பக்க குற்றபத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் வழங்கப்பட்டது. அடுத்தமுறை காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜர்படுத்த தேவையில்லை என்றும், காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தினால் போதுமென சிறைத் துறைக்கு நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த முறை புழல் சிறையிலிருந்து அமலாக்கத் துறை கஸ்டடிக்கு சென்ற போது செந்தில் பாலாஜி வாடிய முகத்துடன் தாடியுடன் வந்திருந்தார். ஆனால் இன்று ஷேவ் செய்து கொண்டு எப்படியும் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் வந்திருந்தார். ஆனால் அவருடைய நம்பிக்கை பொய்த்துவிட்டது. ஜூன் 14 ம் தேதி கைதான செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவல அமலாக்கத் துறை காவல் என இருந்துவிட்டார். கடந்த முறை 150 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் நகலை கேட்ட போது நீதிமன்றம் தர மறுத்துவிட்டது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications