அமலாக்கத்துறை பிடியில் செந்தில் பாலாஜி.. நெஞ்சுவலிக்கு சிகிச்சை..மருத்துவமனைக்கு வந்த முதல்வர்
சென்னை: அமலாக்கத்துறையின் பிடியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை காண முதல்வர் மு.க ஸ்டாலின் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை புரிந்தார். செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்தும் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அரசியல் பழிவாங்கும் இந்த நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று அமலாக்க துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அத்துடன் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சுமார் 12 மணி நேரம் சோதனை நடைபெற்ற நிலையில், நள்ளிரவு செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

நெஞ்சுவலி ஏற்படவே அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அறிந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் , கே.என். நேரு , சேகர்பாபு உள்ளிட்டோர் அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து விசாரித்து செல்கின்றனர்.
மனிதநேயமற்ற முறையில் பா.ஜ.க.வின் அமலாக்கத்துறை நடந்துகொண்டது கண்டனத்துக்குரியது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுபோன்ற அடக்கு முறைகளை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறிய பிறகும் நெஞ்சு வலி வரும் அளவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது அமலாக்கத்துறை என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்வரின் ஆய்வுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற இருந்த நிலையில் தற்பொழுது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை காண முதல்வர் ஸ்டாலின் வருகை தந்துள்ளார். அங்கு சிசிக்கை பெற்று வரும் செந்தில் பாலாஜி அறைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் மருத்துவர்களிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்துள்ளார். எங்களுடைய அரசியல் நிலைப்பாட்டில் நாங்கள் தொடர்வோம் என்று கூறினார். பாஜகவின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications