Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜிக்கு தடையாக நிற்கும் தம்பி.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் அவரது தம்பி தடையாக இருக்கும் அதே நேரத்தில் அவரது எம்எல்ஏ பதவியும் தடையாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது போல எம்எல்ஏ பதவியையும் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை மாதம் முதல் புழல் சிறையில் தவிக்கிறார். ஜாமீன் கேட்டு பலமுறை நீதிமன்ற கதவுகளை தட்டியும் மனுக்கள் தள்ளுபடியானதுதான் மிச்சம். இதுவே செந்தில் பாலாஜியை மன ரீதியாக பாதித்துள்ளது. ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி மன ரீதியாகவும் பாதிப்பிற்கு ஆளாகி வருவதாக சிறை வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன.

Senthil Balaji bail plea Case verdict: Senthil Balaji Will he resign MLA Post

கடந்த முறை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு வந்த போது, அமலாக்க துறை தரப்பில் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், 2,700 பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு நாளும் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் பென் டிரைவில் உள்ளன.

எந்த ஆதாரங்களும் ஜோடிக்கப்படவில்லை. 67 கோடி ரூபாய் வசூலித்தது தொடர்பான அனைத்து ஆதார ஆவணங்களும் சிறப்பு நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட உண்மை ஆவணங்கள் என விளக்கினார். செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார்.

ஜாமீன் மனு விசாரணைக்கு வந்ததால் தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதை அரசு உடனடியாக ஏற்றுக் கொண்டதில் இருந்து அவர் செல்வாக்கான நபர் என்பது தெளிவாகிறது. சாட்சிகள் அச்சுறுத்தப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க கூடாது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், அமலாக்கத் துறை ஆதாரங்கள் சந்தேகத்துக்கு இடமானவை. செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. நீண்டகாலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயார் என குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இன்றைய தினம் தீர்ப்பளிப்பதாக கூறி தள்ளி வைத்தார். இன்றைய தினம், அமலாக்கதுறை தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்,போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, பதவிக்கு ஏற்றவாறு, 2 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை என மொத்தம், 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு மூன்று வழக்குகள் தொடர்ந்துள்ளது.

இந்த வழக்குகளில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், சென்னை எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ளன. அந்த ஆதாரங்கள், உயர் நீதிமன்ற உத்தரவின்படி மட்டுமே அமலாக்கத் துறை பெற்றது. அந்த ஆதாரங்கள் திருத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

கடந்த முறை ஜாமீன் மனு தள்ளுபடிக்கு பிறகு வழக்கில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதுவும் ஜாமீன் மனு விசாரணை துவங்குவதற்கு ஒரு நாள் முன் தான் ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் இன்னமும் அவர் செல்வாக்கான நபராகவே உள்ளார்.

ஏற்கனவே பணம் கொடுத்தவர்களிடம் செந்தில் பாலாஜி சமரசம் செய்திருக்கிறார். வழக்கில் சாட்சிகள் இன்னும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்க கூடும். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சண்முகம், சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும் அமலாக்கதுறை தெரிவித்தது

செந்தில் பாலாஜி தரப்பில், நீண்ட நாட்களாக சிறையில் இருப்பதாகவும், ஜாமீன் வழங்க கோரியும் வாதிடப்பட்டது. இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி நீண்ட நாட்கள் சிறையில் இருப்பதால் அவர் தொடர்புடைய வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 3 மாதத்தில் அவர் மீதான வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+