செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர அமலாக்கத்துறை எதிர்ப்பு.. தீர்ப்பை தள்ளி வைத்த ஹைகோர்ட் நீதிபதி
சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஹைகோர்ட் நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்தார்
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர்.

சுமார் 8 மாதங்களாக இவர் புழல் சிறையில் இருந்து வருகிறார். இவருக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் தலைமறைவாக இருந்தால் அவருக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என அமலாக்கத் துறை மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட போது அவர் அமைச்சராக இருப்பதால் அவர் வெளியே வந்தால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்ற வாதமும் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்தது.
அப்போது அவர் காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்றக் காவல் 20ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். அதாவது செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 21 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டது.
இதனிடையே செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை 21 ஆம் தேதிக்கு தள்ளி வைக்க செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் காணொலி மூலம் சென்னை மாவட்ட 3ஆவது கூடுதல் அமர்வு நீதிபதி முன்பு புழல் சிறையில் இருந்தவாறே காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் மார்ச் 4 ஆம் தேதி வரை 22 ஆவது முறையாக நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்றைய தினம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர அமலாக்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாத விவாதங்கள் முடிவடைந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்தார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications