அல்லாடும் செந்தில் பாலாஜி டீம்.. குற்றச்சாட்டு பதிவு இல்லை + புதிய மனு தாக்கல்: அமலாக்கத்துறை பதில்?
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றச்சாட்டு எதுவும் இன்று பதிவு செய்யப்படவில்லை. அத்துடன், செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி, அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜுன் 14ம் தேதி கைது செய்தனர்.

புழல் சிறை: ஆனால், அன்றைய தினமே இதய பாதிப்பு ஏற்படவும், உடனடியாக அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஒரு மாத வரை மருத்துவமனையில் இருந்த அவர், பிறகு, புழல் சிறையில் மாற்றப்பட்டார்.. இப்போதுவரை இலாகா இல்லாத அமைச்சராகவே செந்தில் பாலாஜி நீடிக்கிறார்.
இதனையடுத்து ஜாமீன் கேட்டு ஹைகோர்ட்டை நாடினார்.. இந்த வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருவதால், ஜாமீன் குறித்த மனுவையும் இந்த நீதிமன்றமே விசாரிக்கும் என்று ஹைகோர்ட் சொல்லிவிட்டது. இதையடுத்து, அமர்வு நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு வந்த நிலையில், அவருக்கு ஒவ்வொரு முறையும் ஜாமீன் மறுக்கப்பட்டது.
அல்லி உத்தரவு: கடந்த 11ம்தேதியும், காணொலி மூலம் செந்தில்பாலாஜி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.. அப்போது, அவரது நீதிமன்ற காவலை ஜனவரி 22ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அந்தவகையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15வது முறையாக நீட்டிக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல, 22ம் தேதியன்று, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும், அப்போது அவர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி எஸ்.அல்லி அதிரடியாக உத்தரரவிட்டிருந்தார். இந்நிலையில், இன்று 22ம் தேதியுடன் நீதிமன்ற காவல் முடிவடைவதால், மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார் செந்தில் பாலாஜி..
மறுத்த கோர்ட்: முன்னதாக, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதையும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.. கடந்த 12ம் தேதி இது தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்..
வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருந்தபோதும்கூட, ஜாமீன் வழங்குவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றம் எதுவும் இல்லை என்பதால் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
எதிர்பார்ப்பு: அந்தவகையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் 22ம் தேதி பதிவு செய்யப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று காலையிலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தபடி இருந்தது.
இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றச்சாட்டு பதிவு இல்லை. எனவே பிரதான பண மோசடி வழக்கில் முடிவுகாணும் வரை அமலாக்கத்துறை வழக்கை தள்ளிவைக்க வேண்டுமென செந்தில் பாலாஜி தரப்பில் மனு தக்கல் செய்யப்பட்டது.. இந்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் தர சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications