"லாக்" ஆகிட்டாரா செந்தில் பாலாஜி.. சூழும் நெருக்கடி..இன்றோடு முடியும் காவல்.. மறுபடியும் நீட்டிப்பா?
சென்னை: திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில், இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைகிறது. இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில், வழக்கறிஞர் ராம் சங்கர், சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக்கோரி, சீனியர் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, சுப்ரீம் கோர்ட் நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்பு முறையீடு செய்தார்.

அப்போது நீதிபதி, ஏற்கெனவே விசாரிக்க வேண்டிய வழக்குகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது.. அதனால், இந்த வழக்கை நாளை (இன்று அக்டோபர் 20ம் தேதி) அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க முடியாது. மேலும், அடுத்த வாரம் நவராத்திரி மற்றும் தசரா பண்டிகையையொட்டி உச்சநீதிமன்றத்துக்கு 10 நாட்கள் விடுமுறை என்பதால், வரும் 30ம் தேதி, இதுதொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு முன்பு விசாரணைக்குப் பட்டியலிடப்படும்" என்றார்.
என்ன காரணம்: இந்த மேல்முறையீட்டின்போது, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த, அடுத்த சில மணி நேரத்திலேயே, இப்படி அபபீல் செய்வது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஹைகோர்ட்டின் உத்தரவு நகல் கிடைத்து விட்டதால், ஆன்லைன் வழியாக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், செந்தில் பாலாஜி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால்தான், ஜாமீன் கோரி விரைவாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது என்று விளக்கம் தரப்பட்டது.
கேவியட் மனு: இதனிடையே, செந்தில் பாலாஜி மேல்முறையீடு மனுவை விசாரிக்கும்போது, தங்களது தரப்பு கருத்தை கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி, அமலாக்கத்துறை சார்பில் வக்கீல் முகேஷ் குமார் மரோரியா கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகிறது. காவல் நிறைவடைந்திருந்த நிலையில், இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக மீண்டும் அவரை காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரிகிறது..
மீண்டும் நீட்டிப்பு: ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதால், அவரின் காவல், மேலும் நீட்டிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே 8 முறை காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், இப்போது 9வது முறையாகவும், காவல் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். இப்படி எல்லா பக்கமும், சிக்கல்கள் கூடியுள்ளதால், சுப்ரீம்கோர்ட்டில் செந்தில் பாலாஜி அப்பீல் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது..
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications