இவர்தான் தலைவர்.. இதனால்தான் வந்தேன்.. திமுகவில் சேர்ந்தது குறித்து செந்தில் பாலாஜி பரபர விளக்கம்
திமுகவில் இணைந்தது ஏன், அமமுகவில் இருந்து விலகியது ஏன் என்று செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுகவில் இணைந்தது ஏன், அமமுகவில் இருந்து விலகியது ஏன் என்று செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று திமுகவில் இணைந்துள்ளார். அவர் தனது ஆதரவாளர்கள் 1000 பேருக்கும் அதிகமானோருடன் இன்று திமுகவில் இணைந்துள்ளனர்.
இதற்காக செந்தில் பாலாஜி அண்ணா அறிவாலயம் வந்தார்.அவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இந்த நிலையில் அவர் திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களை சந்தித்து திமுகவில் இணைந்ததற்கான விளக்கம் அளித்துள்ளார்.

மக்களின் விருப்பம்
அதில், தொண்டர்களை அரவணைத்து செல்லும் தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின். திமுக தலைவர் ஸ்டாலினை சிறந்த தலைவராக பார்க்கிறேன். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் நான் ஒரு இயக்கத்தில் இருந்தேன். திமுக மீதான ஈர்ப்பால் தற்போது திமுகவில் சேர்ந்துள்ளேன். மக்களின் விருப்பம் நான் திமுகவில் இருப்பதுதான்.

அதிமுக அரசு
இபிஎஸ் - ஓபிஎஸ் அரசு மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. மக்களுக்கு எதிரான செயல்களை அதிமுக செய்து வருகிறது. மத்திய அரசுடன் சேர்ந்து அதிமுக தமிழக மக்களை வஞ்சிக்கிறதை திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசுக்கு எதிராக போராடி வருகிறார்.

ஸ்டாலின் முதல்வர்
திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவேன். மக்கள் திமுகவிற்கு வாக்களிப்பார்கள், அதிமுகவை அகற்றுவார்கள். என் அரசியல் பயணம் ஸ்டாலின் தலைமையில்தான் தொடங்கியது. ஸ்டாலின் மூலம் என் அரசியல் பயணம் வெற்றிபெறும் என்று நம்புகிறேன. கரூரில் உள்ள நாடாளுமன்ற சட்டமன்ற தொகுதிகள் அனைத்திலும் திமுகவின் வெற்றிக்காக பாடுபடுவேன். எந்த தேர்தல் வந்தாலும் திமுகவிற்காக பாடுபடுவேன்

நான்தான் சொன்னது
ஸ்டாலின் தலைமையில் திமுகவை ஆட்சியில் அமர வைக்க நான் பாடுபடுவேன் மக்களும் அதற்கு தயாராக இருக்கிறார்கள். 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தீர்ப்பு வந்த போது, மேல்முறையீடு வேண்டாம், தேர்தலுக்கு செல்லலாம் என்று கூறியது நான்தான். அதிமுக மைனாரிட்டி அரசு ஆட்சி செய்ய கூடாது என்றுதான் நான் அப்படி சொன்னேன்.

ஜெயலலிதா முதல்வர்
நான் 18 பேரில் வேறு யாரையும் என்னுடன் கட்சியில் சேர அழைக்கவில்லை. என்னுடன் கட்சியில் சேர்ந்தவர்கள் எல்லோரும் என் ஆதரவாளர்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்றுதான் மக்கள் வாக்களித்தனர். ஓபிஎஸ், இபிஎஸ் ஆட்சி செய்ய வாக்களிக்கவில்லை. தேர்தலில் தோல்வி அடைந்தால் அவர்கள் விவசாயம் பார்க்க சென்று விடுவார்கள்.

ஏன்?
நான் ஒரே இயக்கத்தில் இருந்து கொண்டு இன்னொரு இயக்கத்தில் வேலை பார்க்க மாட்டேன். அன்பிற்குரிய தலைவர் ஸ்டாலினின் செயல்பாடு என்னை ஈர்த்தது. அதனால்தான் நான் இருந்த இயக்கத்தில் இருந்து விலகிகேன். இது கரூர் மாவட்ட மக்களின் விருப்பம். மக்களின் விருப்பத்தை நான் நிறைவேற்றி இருக்கிறேன், என்றுள்ளார்.
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications