8 நாட்களுக்கு அமலாக்கத்துறை கஸ்டடியில் செந்தில் பாலாஜி..கோர்ட் போட்ட கண்டிசன்கள் என்னென்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை துன்புறுத்தவோ, மிரட்டவோ, அச்சுறுத்தவோ கூடாது என அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்துள்ளது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இதய பாதிப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ஓரிரு நாட்களில் பைபாஸ் அறுவை சிகிச்சை வேண்டும் என்று மருத்துவ குழுவினர் கூறியதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரெய்டு விசாரணையின் போது செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் அவரை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தது.

Senthil Balaji in the custody of the Enforcement Directorate what the conditions were put by the court?

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவமனையில் இருந்து காணொலி வாயிலாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் இருதரப்பு வாதங்களும் நடைபெற்ற நிலையில், இரு மனுக்கள் மீதான தீர்ப்பு வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நேற்றைய தினம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது இருதய பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பக்கூடாது என அவரது தரப்பு வழக்கறிஞர் அருண், தனது வாதத்தை முன்வைத்தார்.

தீர்ப்பை வாசித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி,செந்தில்பாலாஜியை வரும் 23ம் தேதி வரை, அதாவது 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க சென்னை முதன்மை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் மருத்துவமனையிலேயே அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என்றும், அவரை விசாரணைக்காக வெளியில் அழைத்து செல்லக் கூடாது என்றும் நிபந்தனை விதித்தார்.

அமலாக்கத்துறை இயக்குநர் கார்த்திக் தாசரிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அதன்படி, காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில்பாலாஜியை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது. செந்தில் பாலாஜியின் உடல்நிலை, அவரது சிகிச்சைக்கு எந்த இடையூறும் இல்லாமல் விசாரிக்க வேண்டும், போதிய உணவு, இருப்பிடம் வழங்க வேண்டும்.

மூன்றாம் தர விசாரணை முறையை பயன்படுத்தக்கூடாது, செந்தில் பாலாஜியை துன்புறுத்தவோ, மிரட்டவோ, அச்சுறுத்தவோ கூடாது, காவலின்போது மருத்துவ ஆலோசனைக்கு உட்பட்டு செந்தில் பாலாஜியை பார்க்க குடும்ப உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும்,செந்தில் பாலாஜி காவலில் இருக்கும்போது அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.

கஸ்டடி முடிந்து செந்தில் பாலாஜியை மீண்டும் செந்தில் பாலாஜியை மீண்டும் ஜூன் 23 மாலை 3 மணிக்கு காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கதுறைக்கு சென்னை முதன்மை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

அதே நேரத்தில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என அமலாகத்துறை தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும் அமலாக்கத்துறையின் கண்காணிப்பில்தான் செந்தில் பாலாஜி இருந்தாகவேண்டும். சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையினர் முன் வைக்கும் கேள்விக்கு உண்மையை சொல்வாரா அல்லது ரெய்டு நாளில் சொன்னது போல தெரியாது, நினைவில்லை என்று மட்டுமே சொல்வாரா என்று பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+