சொன்னார், சொன்னபடி தரமான சம்பவம் செய்தார்.. சபாஷ் வாங்கிய செந்தில் பாலாஜி..காத்திருக்கிறது சிறப்பு!
சென்னை: கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெறச் செய்வேன் என கூறி சொன்னபடி செய்தவர் செந்தில் பாலாஜி. அவருக்கு சர்பிரைஸ் கொடுக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம்.
கரூர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் 2011- 2016 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். பண்டிகை காலங்களில் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு வந்து வெளியூர் செல்லும் பேருந்துகளை ஆய்வு செய்வார்.
ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை நடக்கிறதா என்பதை களத்திற்கே சென்று ஆய்வு செய்வார். இந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏவாக இருந்து பின்னர் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் திமுகவில் இணைந்தார்.

ஸ்டாலின்
சேர்ந்த மாத்திரத்தில் பெரிய மாநாட்டை நடத்தினார். ஸ்டாலினே ஆச்சரியப்படும் அளவுக்கு நடத்தியதால் அவருக்கு கரூர் மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2019இல் தகுதிநீக்கம் செய்யப்பட்டு காலியாக இருந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

கரூர்
போட்டியிட்டார், வென்றார். இதையடுத்து கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் கரூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டார். இதில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கரை தோற்கடித்தார். அது மட்டுமல்ல, கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய 4 சட்டசபைத் தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற செய்தார்.

செந்தில் பாலாஜி
பொதுவாக அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி இந்த முறை ஏன் தொகுதியை மாற்றி கரூரில் போட்டியிட்டார் என்ற கேள்வி எழுகிறது. அதாவது எம்ஆர் விஜயபாஸ்கருக்கும் செந்தில் பாலாஜிக்கும் எப்போதுமே ஆகாது. இந்த முறை கரூர் தொகுதியில் விஜயபாஸ்கர்தான் அதிமுக சார்பில் போட்டியிடுவார் என செந்தில் பாலாஜிக்கு நன்றாக தெரியும்.

பெருமை
இதனால் அங்கு போட்டியிட்டு அமைச்சரையே தோற்கடித்தவர் என்ற பெருமையை பெற்றார். தேர்தலுக்கு முன்னர் ஸ்டாலின் தனது உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் கூட அனைத்து அமைச்சர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும் என கூறியிருந்தார். அதை செய்து காண்பித்துவிட்டார் செந்தில்.

சிறப்பான சம்பவம்
மேலும் இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியிலும், சட்டசபைத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என ஸ்டாலினிடம் தனது ஆசையை கூற அதற்கு ஸ்டாலினும் பச்சைக் கொடி காட்டிவிட்டார். ஸ்டாலின் இவர் மீது நம்பிக்கை வைத்ததற்கேற்ப சிறப்பான சம்பவத்தை செய்துவிட்டார்.

துறை காத்திருக்கிறதாம்!
எப்போதுமே தன்னை குளிரவைத்துவிட்டால் அவர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்து திக்குமுக்காட செய்வதில் ஸ்டாலினுக்கு நிகர் அவரே. கரூரில் 4 சட்டசபைத் தொகுதியையும் ஸ்டாலினிடம் ஒப்படைத்த செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் இடம் காத்திருக்கிறதாம். அமைச்சரவே தோற்கடித்து 4 தொகுதிகளை "வளைத்து" போட்டது சும்மாவா!
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி?












Click it and Unblock the Notifications