4 மாசத்துக்கு முன்னாடியே நின்னு போச்சு.. கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இப்ப போய்ட்டார்.. தினகரன்
செந்தில் பாலாஜி எனக்கு நல்ல தம்பி, அவர் எங்கிருந்தாலும் வாழ வேண்டும் என்று என்று டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: செந்தில் பாலாஜி எனக்கு நல்ல தம்பி, அவர் எங்கிருந்தாலும் வாழ வேண்டும் என்று என்று டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.
தமிழக அரசியலில் தற்போது செந்தில் பாலாஜி புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று திமுகவில் இணைந்துள்ளார்.
செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த நிலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

2006ல் இருந்து தெரியும்
அதில், 2006ல் இருந்து செந்தில் பாலாஜியை எனக்கு தெரியும். எங்கள் உறவு நன்றாகத்தான் இருந்தது. 4 மாதம் முன் வரை நன்றாக பேசினார். திடீர் என்று சொந்த பிரச்சனை, சில நாள் ''ஆக்ட்டீவாக'' இருக்க மாட்டேன் என்றார். நான் சரி என்று கூறி அனுப்பி வைத்தேன்.

குறைத்துக் கொண்டார்
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர் எங்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டார். எங்களுடன் காரில் வருவதை குறைத்துக் கொண்டார். கஜா புயலின் போது நிவாரணம் அனுப்பி வைத்தார். ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

தம்பி எங்கிருந்தாலும் வாழ்க
சொந்த பிரச்சனை என்று கூறிவிட்டு சென்றவர் இப்போது திமுகவிற்கு சென்றுவிட்டார். அவர் போனதில் வருத்தம் இல்லை. செந்தில் பாலாஜி நல்ல தம்பிதான். யாரையும் கட்சியில் இழுத்து வைக்க முடியாது. அவர் எங்கிருந்தாலும் வாழ்க.

மதிமுக தேமுதிக
சிலர் வெளியே செல்வதால் எங்கள் இயக்கம் ஒன்றும் சிதைந்துவிடாது. அமமுக ஒன்றும் மதிமுக, தேமுதிக போல ஆகிவிடாது. எந்த கட்சியில் இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பம் அவரிடம் அமமுக உறுப்பினர் விண்ணப்ப படிவங்கள் உள்ளது. அதை மட்டும் அவர் திருப்பி கொடுக்க வேண்டும்.

திமுக நிலை
எங்கள் கட்சி உறுப்பினர் திமுகவில் சேர்வதற்கு கூட விழா எடுக்கிறார்கள். அந்த அளவிற்கு திமுகவின் நிலை சென்றுவிட்டது. திமுகவின் நிலைமை மிக மோசமாகிவிட்டதை இது காட்டுகிறது. திமுக அந்த அளவிற்கு ஆர்கே நகரில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. அதனால்தான் எங்கள் கட்சி உறுப்பினருக்கு அவ்வளவு மரியாதை அளிக்கிறார்கள், என்றுள்ளார்.
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார்












Click it and Unblock the Notifications