கிளீன் ஷேவ், கண்களை சுற்றி கருவளையங்கள்! முகத்தில் சோர்வுடன் வெளியே வந்த செந்தில் பாலாஜி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 15 மாதங்களுக்கு பிறகு புழல் சிறையிலிருந்து செந்தில் பாலாஜி வெளியே வந்த நிலையில் அவர் கிளீன் ஷேவில் இருந்தார். கண்களுக்கு கீழே கருவளையத்துடன் முகத்தில் சோர்வுடன் இருந்தார். அவரை திமுகவினர் வரவேற்றனர்.

471 நாட்களுக்கு பிறகு சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியை வரவேற்க திமுகவினர் வந்திருந்ததால் மாதவரம்- ஆந்திரா செல்லும் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து போனது. இரவு 7.15 மணிக்கு செந்தில் பாலாஜி வெளியே வந்தார்.

senthil balaji supreme court

அவரை பார்க்கும் போது கிளீன் ஷேவிங் இருந்தார். கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை பார்த்தால் அவர் இத்தனை நாட்கள் தூங்க முடியாமல் தவித்தது தெரிகிறது. அது போல் அவருடைய முகம் சோர்வாகவே இருந்தது. செந்தில் பாலாஜிக்கு ரோஜா பூக்களை தூவிய திமுகவினர், அவருக்கு திமுக துண்டையும் அணிவித்தனர்.

சிறை வாயிலில் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்து திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் செந்தில் பாலாஜி தற்போது எங்கே செல்கிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பின்னணி என்ன?: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் விசாரணையில் இருந்த போதே இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை நீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஓகா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. அதாவது நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அந்த நிபந்தனையில் இருவர் அவருக்கு ரூ 25 லட்சம் பிணை செலுத்த வேண்டும்.

திங்கள், வெள்ளி ஆகிய இரு நாட்களும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். சாட்சியங்களை மிரட்டக் கூடாது, சந்தித்து் பேசக் கூடாது. அமலாக்கத் துறை வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். வாய்தா மேல் வாய்தா வாங்கக் கூடாது உள்ளிட்ட விவகாரங்கள் நிபந்தனைகளாக கொடுக்கப்பட்டன.

இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுத்த உச்சநீதிமன்றத்தில் நகலுடன் ரூ 25 லட்சம் பிணை பணத்துடன் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் பிணை உத்தரவாதத்தை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடாததால் குழப்பம் உள்ளதாக தெரிவித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், இதுகுறித்து அமலாக்கத்துறை வழக்கறிஞரை அழைத்து விளக்கம் கேட்டார்.

பிணை உத்தரவாதத்தை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை என அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது அடுத்து, செந்தில்பாலாஜியின் உறவினர்கள் சிவப்பிரகாசம் மற்றும் தியாகராஜன் ஆகியோர் தாக்கல் செய்த பிணை உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்துதான் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+