செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் மனு.. அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
சென்னை: சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கூடுதல் குற்றப்பத்திக்கையை கோப்புக்கு எடுத்த உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் முறைகேடாக பணி நியமனம் செய்ய பணம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக, சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறையினர் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இந்த குற்றப் பத்திரிகையை, முதன்மை அமர்வு நீதிமன்றம் கோப்புக்கு எடுத்துக் கொண்டது.
புதிய குற்றவியல் சட்டத்தின் படி, குற்றப்பத்திரிகையை கோப்புக்கு எடுக்கும் முன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும். ஆனால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் கூடுதல் குற்றப்பத்திரிகையை கோப்புக்கு எடுத்து, முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், கார்த்திகேயன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அசோக் குமார் அமலாக்கத்துறையின் சம்மன்களுக்கு ஆஜராகவில்லை. அதன் பிறகு அவர் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவானார். 2 ஆண்டு தலைமறைவு வாழ்க்கைக்குப் பிறகு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் கோர்ட்டில் ஆஜர் ஆனார். அதன் பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications