தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு விரைவில் அறிமுகம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு விரைவில் அமல்படுத்தப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

பொதுவாக தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் இரு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடப்படுவதால் அதிக கட்டணத்தை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்துவதை விட இரு மாதங்களுக்கு ஒரு முறை செலுத்துவது என்பது கட்டணம் அதிகமாகவே இருக்கும். அதாவது டேரிஃப் முறைபடி இந்த கட்டணம் அதிகரிக்கிறது.

தமிழகம்

தமிழகம்

நமது அண்டைய மாநிலங்களில் மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்துவதற்கான கோரிக்கை நீண்ட காலமாகவே உள்ளது.

ஒரு முறை

ஒரு முறை

இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கிடும் போது ஒரு முறை 10-ஆம் தேதி கணக்கிட்டால், அடுத்த முறையும் அதே தேதியில் கணக்கிட வேண்டும். ஆனால் இதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் டேரிஃப்பின் அடிப்படையில் அதிக மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

தேர்தல்

தேர்தல்

இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடும் முறை அமலுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தனர். நடந்து முடிந்த தேர்தலில் திமுக வென்றுவிட்டது. சொன்ன வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.

அமைச்சர் வாக்குறுதி

அமைச்சர் வாக்குறுதி

அந்த வகையில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில் தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+