செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சாராக தொடர்வார்..அரசு உறுதி..ஆளுநருக்கு முதல்வர் கடிதம்
சென்னை: செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளதாக நேற்று இரவு தகவல் வெளியானது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என தமிழக முதல்வர் அறிவித்தார். அடுத்த சில மணிநேரங்களிலேயே தனது அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக கூறினார் ஆளுநர் ரவி.

இதனையடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. திமுக கூட்டணி கட்சித்தலைவர்கள் பலரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்தனர். இன்று காலையில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இந்த நிலையில் தமிழக முதல்வருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், ஜூன் 16ஆம் தேதி செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக நீங்கள் எழுதிய கடிதத்தில், விரும்பத்தகாத வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. நீங்கள் எழுதியுள்ள கடிதத்தில் செந்தில் பாலாஜி கைது குறித்த விவரங்கள் இடம்பெறவில்லை. இலாகாக்கள் மாற்றம் குறித்த தகவல் மட்டுமே இடம் பெற்றது. அந்த இலாகாக்கள் ஏன் மாற்றப்பட வேண்டும் என்ற முழுமையான தகவல்கள் இல்லை.
எனக்கு எழுதிய கடிதங்களில் விரும்பத்தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளீர்கள். தகவல்களை மறைக்கும் விதமாக உங்களது செயல்பாடுகள் உள்ளது '' என பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக முதல்வர் மீது ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் தான் செந்தில் பாலாஜியின் டிஸ்மிஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனைகள் கேட்கப்பட்டு செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைக் குறித்து தெரிவிக்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் தெரிவித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பதில் எழுதியுள்ளார். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு ஆளுநருக்கு பதில் கடிதம் முதல்வர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அரசியல் அமைப்பு சட்டப்படி அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications