செந்தில் பாலாஜி உதவியாளர் சாமிநாதன் ஆவணங்களை மறைக்க முயற்சி.. சிசிடிவி மூலம் அம்பலம்.. அமலாக்கத்துறை
சென்னை: சோதனையின் போது செந்தில் பாலாஜி உதவியாளர் சாமிநாதன் ஆவணங்களை மறைக்க முயற்சித்ததாகவும் அவரது உறவினர் சாந்தி ஆவணங்கள் அடங்கிய பையை எடுத்து சென்று ஓட்டுநர் சிவாவிடம் கொடுத்தது சிசிடிவி மூலம் தெரியவந்தது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை சோதனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார். அவரது கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஒரு பக்கம் தொடர்ந்து நடக்கும் நிலையில், மறுபுறம் பல பரபர சம்பவங்கள் நடந்து வருகிறது.

அந்த வகையில், கடந்த வியாழக்கிழமை திண்டுக்கல் வேடசந்தூரில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் வீரா எஸ்.டி சாமிநாதனுக்கு இடங்களில் சோதனை நடத்தியது. இவருக்கு சொந்தமான நிதி நிறுவனங்கள், புஷ்பத்தூரில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இவர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் கூறப்பட்டது.
சாமிநாதனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை முடிந்த மறுநாளே, அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கரூரில் உள்ள சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். அன்றைய தினம் மாலை சங்கர் இல்லம் மற்றும் நிதி நிறுவனம் ஆகியவற்றில் சோதனை நிறைவு பெற்றது. 24 மணி நேரத்திற்கு மேலாக தனலட்சுமி மார்பிள்ஸ் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற சோதனை நேற்று காலை முடிவுக்கு வந்தது.
பிற்பகலில் லக்கி டிரேடர்ஸ் உரிமையாளர் செந்திலுடன் விஎஸ்பி அறக்கட்டளை அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சென்று சோதனை நடத்தினர். செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக விடிய நடைபெற்ற சோதனை நேற்று நள்ளிரவு நிறைவு பெற்றது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சாமிநாதன் சோதனையின் போது ஆவணங்களை அவர் மறைக்க முயற்சித்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ஆவணங்கள் இருந்த பையை சாமிநாதனின் உறவினர் சாந்தி எடுத்து சென்றது சிசிடிவி மூலம் தெரியவந்தது. சாந்தி பையை எடுத்து சென்று ஓட்டுநர் சிவாவிடம் கொடுத்தது சிசிடிவி மூலம் தெரியவந்தது. சாமிநாதன் உறவினர் சாந்தி தொடர்புடைய இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஓட்டுநர் சிவா வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.22 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன என்று அமலக்கத்துறை தெரிவித்துள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications