செந்தில் பாலாஜியின் பைபாஸ் ஆபரேசனை நேரு விளையாட்டு அரங்கத்திலா நடத்த முடியும்.. கேட்ட மா.சுப்ரமணியன்
சென்னை: செந்தில் பாலாஜிக்கு செய்யப்பட்ட பைபாஸ் ஆபரேசனை நேரு விளையாட்டு அரங்கத்திலா வைத்து செய்ய முடியும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். ஆபரேசன் செய்யப்பட்டதில் வெளிப்படைத்தன்மையில்லை என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 14ஆம் தேதி அதிகாலை கைதுசெய்தனர். அப்போது, நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவின்படி, காவேரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு இதய நோய் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் கடந்த 21ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரம் பைபாஸ் ஆபரேசன் செய்யப்பட்டது. 4 ரத்த நாளங்களில் அடைப்பு இருந்த நிலையில் அந்தப் பகுதிகளில் 4 ரத்தக் குழாய்கள் பொருத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, வென்டிலேட்டர் கருவி பொருத்தி மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், ரத்த அழுத்தம் மற்றும் ரத்த ஓட்டம் சீராக இருப்பதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்தது. செந்தில் பாலாஜி எவ்வளவு நாட்கள் ஓய்வுவெடுக்க வேண்டும் என்பதை காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
செந்தில் பாலாஜியை சாதிக் பாட்ஷாவுடன் ஒப்பிட்டு சிலர் பேசி வருகிறார்களே என்று செய்தியாளர்கள் சிலர் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு சட்டென்று கோபப்பட்ட மா.சுப்ரமணியன், உங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவரை அழைத்துச் சென்று, அவருக்கு இதயத்தில் எத்தனை அடைப்புகள் இருந்தன, எப்படி அறுவை சிகிச்சை நடந்தது என்பதை கேட்டு தெரிந்துகொண்டு நீங்களே செய்தி வெளியிடுங்கள். மற்ற சந்தேகப் பேர்வழிகளுக்கு எல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் சிறப்பு மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, இந்த முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, எக்கோ பரிசோதனை செய்யப்படுகிறது.
இ.சி.ஜி பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை பரிசோதனை, பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மருத்துவம், மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு பிரிவுகளில் இருக்கக்கூடிய மருத்துவர்களால் ஆலோசனை வழங்கப்படும்.
சென்னையை பொறுத்தவரை 10 இடங்களிலும், தமிழகம் முழுவதும் உள்ள மற்ற மாவட்டங்களில் 90 இடங்களிலும் இந்த முகாம் நடத்தப்பட உள்ளது. முகாமை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் காரணமாக சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1.67 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் உயிரிழப்புகள் மேலும் குறையும். இதற்காக சுமார் 140 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
செந்தில் பாலாஜி சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற எதிர்க்கட்சிகள் விமர்சனத்திற்கு பதில் அளித்த அமைச்சர், செந்தில் பாலாஜிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையை விமர்சிக்கும் எதிர்கட்சியினர் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டால் தான் அதன் தீவிரம் அவர்களுக்கு தெரியக்கூடும். உடலை கிழித்து செய்யக்கூடிய ஆபரேசனை எப்படி பொய்யாய செய்ய முடியும் என்று கேட்டார். வெளிப்படை தன்மையுடன் இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனில் , நேரு ஸ்டேடியத்தில் வைத்து 15 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் வைத்தா செய்ய முடியும் என்று கோபத்தோடு பதில் அளித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications