புழல் சிறைக்குள் சிக்கிய செந்தில் பாலாஜி.. நீட்டிக்கப்படும் காவல்.. சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு
சென்னை: புழல் கடந்த 9 மாத காலமாக அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் 27வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 21ஆம் தேதி வரைக்கும் நீதிமன்றக்காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பலமுறை ஜாமீன் கேட்டு நீதிமன்ற கதவை தட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார் செந்தில் பாலாஜி.
கடந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதி செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கையின் நகலை பெற்றுக் கொண்ட செந்தில் பாலாஜி தொடர்ந்து ஜாமீன் கேட்டு விண்ணப்பித்து வருகிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்று முறையும், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 முறையும், உச்ச நீதிமன்றத்தில் ஒரு முறையும் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் இரண்டாவது முறையாக உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்துள்ளார் செந்தில் பாலாஜி. விரைவில் இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.
ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் போதெல்லாம் இந்த முறை கண்டிப்பாக சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வீட்டிற்கு வந்து விடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள். அதற்கு எதிர்மாறாக செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விடும்.
இதனிடையே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 21ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 27ஆவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்பாக செந்தில் பாலாஜிக்கு சிறைக்கதவுகள் திறக்கப்படுமா? பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications