Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புழல் மருத்துவமனையில் படுத்தபடுக்கையாக ஆஜரான செந்தில் பாலாஜி! திடுக்கிட்ட நீதிபதி அல்லி! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அவர் புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் படுத்தபடுக்கையாகவே காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதியும், அவருக்கு என்னவாயிற்று, ஏன் மருத்துவமனையில் இருக்கிறார் என சிறைக் காவலரிடம் கேட்டறிந்தார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன.

senthil balaji court puzhal

தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது.

இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.

படுக்கையில் படுத்திருந்தவாறு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டதால் அவருக்கு என்ன ஆனது? என நீதிபதி அல்லி கேட்டார். அதற்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளதால், செந்தில் பாலாஜிக்கு, சிறைச் சாலை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக சிறை காவலர் விளக்கமளித்தார்.

இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். 52ஆவது முறையாக அவருடைய நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அது போல் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்து செய்த நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுக்காக இன்றைய தினம் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.வாக உள்ளதால் இந்த மனுவை எண்ணிடுவதற்காக தலைமை நீதிபதி முன்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் எண்ணிடப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் அதுவரை குற்றச்சாட்டுப்பதிவை தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

எத்தனை முறை வாய்ப்பளிப்பது என கேள்வி எழுப்பிய நீதிபதி மனு இன்னும் எண்ணிடப்படாத நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கருதி குற்றச்சாட்டுப் பதிவை எப்படி தள்ளிவைக்க முடியும் என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, புதிய மனு குறித்து வாதிட அனுமதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு நீதிபதி அனுமதி அளித்த நிலையில் அது தொடர்பான வாதங்கள் செந்தில் பாலாஜி சார்பில் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, செந்தில் பாலாஜி மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.அல்லி குற்றச்சாட்டுப் பதிவை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+