சட்டவிரோத காவலில் இருப்பதாக மனு.. செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு
சென்னை: சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நாளை நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 13 ஆம் தேதி கைது செய்துள்ளனர். தற்போது உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். நீதிமன்றக்காவலில் இருக்கும் செந்தில்பாலாஜி உள்ள நிலையில், அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி என் கணவரை சட்ட விரோதமாக கைது செய்துள்ளனர். அவரின் கைதுக்கான காரணத்தை கூறவில்லை என்று செந்தில் பாலாஜி மனைவி மேகலா தனியாக ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டது. இந்த மனு மீதான வாதம் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதிட்டார்.
தனது வாதத்தில், "கைதுக்கான காரணங்களை தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட கைது மெமோவில் செந்தில் பாலாஜி கையெழுத்திட மறுத்தார் என கூற எந்த ஆதராரமும் இல்லை. இதன் மூலம் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளார் என்பது நிரூபணமாகி உள்ளது. ஆனாலும் இதை எதையும் கணக்கில் எடுக்காமல் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது" என வாதிட்டார்.
அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். அவர் வைத்த வாதத்தில், உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் பெற்றார் என்பதற்கான ஆதாரம் உள்ளது. அதன் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை. நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்படவில்லை. எனவே ஆட்கொணர்வு வழக்கு தொடர முடியாது.
நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பிக்கும் முன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதால், சட்டவிரோத கைது என கூற முடியாது என்று துஷார் மேத்தா வாதிட்டார். இரு தரப்பிலும் பரபரப்பாக இந்த வாதங்கள் நடைபெற்ற நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் நாளை(செவ்வாய்க்கிழமை) சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications