அந்த ”2 அமைச்சர்களால்” திமுக ஆட்சி கவிழும்! அவரு முடிவு பண்ணிட்டா.. ஜெயக்குமார் போட்ட புது குண்டு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி இலக்கை நிர்ணயம் செய்துவிட்டார் என்றால் அடையாமல் விடமாட்டார் என்றும், ஆட்சிக் கவிழ்ப்பைதான் பிரமாண்டம் என ஸ்டாலின் சொல்கிறாரா? எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சேர்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஆதரவு திரட்டிய திரௌபதி
இந்த நிலையில் நேற்று திரௌபதி முர்மு சென்னை வந்து கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

ஜெயக்குமார் பேட்டி
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "பொதுக்குழு முடிவை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றிருந்தால் திரௌபதி முர்முவை தனியாக சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. அதிமுகவை பொருத்தவரை பொதுக்குழுதான் இறுதி அதிகாரம் கொண்டது. பொதுக்குழுவை காட்டிலும் வேறு எதற்கும் அதிக அதிகாரம் இல்லை.

ஒற்றைத் தலைமையை விரும்பும் தொண்டர்கள்
அவர் அந்த பொதுக்குழுவில் பங்கேற்று அதிமுக தொண்டர்களின் ஒட்டுமொத்த எண்ணத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் செயலாற்றினால் எந்த பிரச்சினையும் இருந்திருக்காது. பொதுக்குழு முடிவை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த காரணத்தாலேயே ஓ.பன்னீர்செல்வம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். ஒட்டுமொத்த தொண்டர்களின் எண்ணமுமே அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதுதான்." என்றார்.

திமுக அரசு
அப்போது அவரிடம் மகாராஷ்டிரா ஆட்சிக் கவிழ்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "மகாராஷ்டிரா விவகாரத்தை பற்றி பேச ஒன்றுமில்லை. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூரில் அரசு விழாவில் பேசும்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு பிரமாண்டத்தை ஏற்படுத்திவிட்டு மற்றுமொரு பிரமாண்டத்தை ஏற்படுத்தப்போகிறார் என்று கூறுகிறார்.

ஆட்சி கவிழ்ப்பு
என்ன பிரமாண்டம் என்று எனக்கு தெரியவில்லை. ஆட்சி கவிழ்க்கும் பிரமாண்டமா? அந்த பிரமாண்டத்தைதான் சூசகமாக சொல்கிறாரா? செந்தில் பாலாஜி இலக்கை நிர்ணயித்துவிட்டார் என்றால் அதை அடையாமல் விடமாட்டார். மகாராஷ்டிரா மாதிரி இந்த ஆட்சி கவிழ்வதற்கு செந்தில் பாலாஜியும் சேகர் பாபுவும் போதும்." என்றார்.
-
காது கூசுது.. இவ்ளோ கேவலமாக பேசுவதா? நயன்தாரா குறித்த சிவி சண்முகம் பேச்சு! நடிகர் சங்கம் டென்ஷன் -
தேர்தல் விதி வருவதற்கு.. 20 நிமிடம் முன் சென்னையில் மாஸ் "சம்பவம்".. இது லிஸ்டுலேயே இல்லையே -
விசித்திரமா இருக்கே.. தமிழ்நாட்டிற்கு தாமதமாக தேர்தல் ஏன்? தேர்தல் ஆணையம் வைத்த பெரிய ‘ட்விஸ்ட்’ -
38 நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தல்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான் -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
மகளிர் உரிமை தொகை செக்.. தமிழக தேர்தல் தாமதமாக நடக்க காரணமே இதுதான்? ‘உரிமைத் தொகை’ பாலிடிக்ஸ்?! -
"திமுக இருக்கும் வரை பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் பலிக்காது".. நோன்பு நிகழ்வில் உதயநிதி உறுதி! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
சட்டசபை தேர்தலில் போட்டியிட கனிமொழி ஆர்வம்.. எந்த தொகுதி? ஸ்டாலின் கையில் முடிவு -
வேகம் எடுக்கும் திமுக.. வேட்பாளர்கள் யார் யார்.. 17 ஆம் தேதி நேர்காணலை தொடங்குகிறார் ஸ்டாலின் -
Election Exclusive: நான் என்ன வைகோவா? இப்பவே அத்துக்கிட்டு போறேன்.. அடம் பிடிக்கும் தவாக வேல்முருகன்! போனை போட்ட தலைகள்!












Click it and Unblock the Notifications