ஐஏஎஸ் உதய்சந்திரனுக்கு கல்வித்துறை.. முதல்வரின் 4 செயலாளர்களுக்கு துறை ஒதுக்கீடு.. ஸ்டாலின் அதிரடி!
சென்னை: முதல்வர் மு.க ஸ்டாலினின் தனி செயலாளர்களாக அறிவிக்கப்பட்ட உதயசந்திரன் உட்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தற்போது தனியாக துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
Recommended Video
தமிழக முதல்வராக பதவி ஏற்று ஒரு வாரத்திற்கு உள்ளாக திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் பல அதிரடி அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார். முக்கியமாக தன்னை சுற்றி ஸ்டாலின் உருவாக்கி வைத்து இருக்கும் திறமையான அதிகாரிகளின் வட்டம் கவனம் ஈர்த்துள்ளது.
கடந்த ஆட்சியில் ஓரம் கட்டப்பட்ட திறமையான அதிகாரிகளை தேடிப்பிடித்து அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை கொடுத்துள்ளார். தலைமை பொறுப்புகள் அனைத்திற்கும் நேர்மையான கண்டிப்பான அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார்.

நியமனம்
தலைமை செயலாளராக இறையன்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்னொரு பக்கம் ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ்.ஷண்முகம், அனு ஜார்ஜ் ஐஏஎஸ் போன்ற நேர்மையான அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் நியமனம் புதிய அரசின் மிக முக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது.

உதயச்சந்திரன்
இந்த 4 தனி செயலாளர்களுக்கு தற்போது தனி தனி பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளதுன. தனியாக இவர்களுக்கு சில துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கல்வித்துறையில் அதிக அனுபவம் மிக்க, தமிழக பள்ளிக்கல்வித்துறையில் சீர்திருத்தங்களை ஏற்படுத்திய ஐஏஎஸ் உதயச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனு ஜார்ஜ்
அதேபோல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி அனு ஜார்ஜூக்கு விளையாட்டுத்துறை, சுற்றுச்சூழல், சமூக நலம், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் மிகவும் ஸ்டிரிக்ட் அதிகாரி, கடந்த ஆட்சியில் ஓரம்கட்டப்பட்ட நிலையில் திமுக ஆட்சியில் இவருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

உமாநாத்
இது போக ஐஏஎஸ் அதிகாரி உமாநாத்திற்கு போக்குவரத்து, நிதி, உணவு, சுகாதாரம்,உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்திற்கு வருவாய், சட்டம், முதல்வர் அலுவலக நிர்வாகம், கூட்டுறவு, வேளாண் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications