அய்யய்யோ தனித் தமிழ்நாடு கேட்கிறாரே திருமாவளவன்.. அலறும் எச்.ராஜா- குண்டாஸில் கைது செய்ய கோரிக்கை!
சென்னை: தனித் தமிழ்நாடு கேட்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் திருமாவின் சிந்தனை கோட்பாடுகள் என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் திருமாவளவன் பங்கேற்று பேசிய பேச்சுதான் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், பதவி, அதிகாரம், பொருள் ஈட்டுதலுக்கான வாய்ப்புதான் அரசியல் என்கிற உணர்வை கட்டமைத்துள்ளனர். அரசியல் கட்சிகளில் கொள்கை, கோட்பாடுகளை அலசி ஆராய்ந்து விவாதிப்பவர்கள் எண்ணிக்கை மிக குறைவுதான். அவர்கள்தான் கட்சிகளின் முக்கிய பொறுப்புகளில் வழிநடத்துகின்றனர். நாங்கள் சொல்கிற அடங்கமறு! அத்துமீறு! திருப்பி அடி! என்பது ஒரு செயல் திட்டம்தான். இது வன்முறை முழக்கம் அல்ல.

தனி தமிழ்நாடு,
தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதுதான் தமிழ்த் தேசியத்தின் இறுதி இலக்காகும். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வழி தேசியம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அத்தகைய மொழிவழித் தேசியங்களின் ஒன்றியமாகத்தான் மத்த்ய அரசு இருக்கவும் வேண்டும். அது மாநிலங்களின் ஒன்றியம் என்பதற்கு அப்பால், தேசிய இனங்களின் ஒன்றியம் என்பதாக இருத்தல் அவசியம் என பேசியிருந்தார்.

காடேஸ்வரா சுப்பிரமணியம்
திருமாவளவனின் இந்தப் பேச்சுக்கு வலதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இந்தியத் திருநாட்டின் ஒற்றுமைக்கு, இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தமிழ் தேசியத்தின் கடைசி இலக்கு என்பது தனித் தமிழ்நாடுதான் என விஷ விதையை திருமாவளவன் தூவியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட திருமாவளவன், இறையாண்மையை கேலிக் கூத்தாக்கும் வகையிலும் தனித் தமிழ்நாடு எனும் பிரிவினியை பேசி இந்திய அரசியலமைப்பின் மீது தனக்கு இல்லாதது போல பேசியுள்ளார். ஆகையால் திருமாவளவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார் காடேஸ்வரா சுப்பிரமணியம்.

பாஜக நாராயணன் திருப்பதி
அதேபோல் பாஜகவின் நாராயணன் திருப்பதி தமது ட்விட்டர் பக்கத்தில், ஒரத்த நாடு, வருச நாடு, பாப்பா நாடு, முறப்ப நாடு என்பது போல் தமிழ்நாடு என்பது ஒரு மாநிலத்தின் பெயர் மட்டுமே. தனிநாடு என்று பிரிவினைவாதம் பேசுபவர்களுக்கு தமிழ் நாட்டில் இடமில்லை என்பது மட்டுமே தேசியவாதிகளின் ஒரே இலக்காக இருக்கிறது என விமர்சித்திருந்தார்.

குண்டாஸில் கைது செய்க- எச்.ராஜா
தற்போது பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது: தனித் தமிழ்நாட்டை வெட்டி எடுப்பது தான் தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு என்று பேசியுள்ள தேசவிரோதி தீயசக்தி திருமாவளவனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான்












Click it and Unblock the Notifications