Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செப்டம்பர் 22.. இதே நாளில்.. போயஸ்கார்டன் வீட்டில் மயங்கி விழுந்த ஜெயலலிதா.. பிளாஷ்பேக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தொண்டர்களால் மறக்க முடியாத நாளாக மாறி விட்டது செப்டம்பர் 22. கடந்த 2016ஆம் ஆண்டு இதே நாளில்தான் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா இறுதியில் சடலமாகவே அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக வெற்றி பெற்று 6வது முறையாக முதல்வராக அரியணை ஏறினார் ஜெயலலிதா. ஆனால் 6 மாதம் கூட அவர் முதல்வராக ஆட்சி செய்ய இயற்கை ஒத்துழைக்கவில்லை.

September 22,2016 8 years ago on this day Jayalalitha fainted in the bathroom

ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதியன்று சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயிலை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதனையடுத்து தாலிக்கு 8 கிராம் தங்கம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தனது கைப்பட தொடக்கி வைத்தார். அப்போதே அவரது நடையில் தடுமாற்றம் இருந்தது. மெதுவாக தடுமாறியபடியே வந்தார் மேடையில் கம்பீரம் குறையாமல் பேசினார்.

செப்டம்பர் 22ஆம் தேதி இரவு திடீரென உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்போலோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் ஜெயலலிதாவின் முகத்தை காட்ட மருத்துவர்கள் மறுத்து விட்டனர். அரசியல் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் ஆளுநர் என பலரும் அப்பல்லோவிற்கு வந்தாலும் யாருமே ஜெயலலிதாவை பார்க்க முடியாமல் போனது.

ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்.. ஜூஸ் குடித்தார் என்றெல்லாம் நேரில் பார்த்தது போலவே செய்தியாளர்களிடம் சொன்னார்கள். டிசம்பர் 4ம் தேதியன்று ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்ட போது எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கு சில லட்சங்கள் செலவானது. எக்மோ கருவி மூலம் 24 மணி நேரத்திற்கும் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 'கார்டியாக் அரெஸ்ட்' எனப்படும் இதயச் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், கவலைக்கிடமாக உள்ளார் என்றும் அப்போலோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

டிசம்பர் 5ஆம் ஜெயலலிதா மரணம் அடைந்ததாகத் தகவல் வெளியிடப்பட்டது. 6ஆம் தேதியன்று அவசரம் அவசரமாக அடக்கம் செய்யப்பட்டார் ஜெயலலிதா. கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி போயஸ் கார்டனில் என்னதான் நடந்தது? அவரின் உதவியாளர்கள் எங்கே சென்றனர்? அவருக்கு அளிக்கப்பட்டிருந்த கருப்பு பூனை படை எங்கே போனது? உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட போது, போயஸ்கார்டனில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகள் எங்கே?. ஜெயலலிதாவிற்காக போயஸ்கார்டனில் எப்போது நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் எங்கே போனது?. இப்படி பல சந்தேகங்கள் எழுந்தன.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று சொன்னார் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். ஆறுமுகம் சாமி ஆணையம் அமைக்கப்பட்டது. ஆறு ஆண்டுகள் விசாரணை நடைபெற்றது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வி.கே.சசிகலாவின் நெருங்கிய உதவியாளர், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்த எழுத்துப்பூர்வ அறிக்கையில், முன்னாள் முதல்வரை "அக்கா" என்றும் தமிழில் சகோதரி என்றும் குறிப்பிட்டுள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதால், அவருக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது மற்றும் 2016 ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலுக்குப் பிறகு பல நோய்களுக்கு வழிவகுத்தது.

உடலில் பல இடங்களில் கொப்புளங்களும் அரிப்புகளும் வர ஆரம்பித்தன. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதியே காய்ச்சல் இருந்தது சோர்வாகவே அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஜெயலலிதா என்று குறிப்பிட்டுள்ளார் சசிகலா. மருத்துவமனைக்கு போகலாம் என்று அழைத்த போதும் ஜெயலலிதா மறுத்துவிட்டதாக கூறியுள்ளார் சசிகலா.

22ஆம் தேதி இரவு சசி எனக்கு மயக்கமாக இருக்கிறது, இங்கே வா என்று அழைத்தார். நான் உடனே பாத்ரூம் சென்று அக்காவை அழைத்து வந்து கட்டிலில் உட்கார வைத்துவிட்டு அவரது அருகில் அமர்ந்தேன். அப்போது திடீரென மயக்கமான நிலையில் அக்கா என் தோளில் சாய்ந்தார் என்று குறிப்பிட்டுள்ளார் சசிகலா.

பல கட்ட விசாரணைகள் நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு 23ஆம் தேதி சமர்ப்பித்தார். இந்த விசாரணையின் போது ஓ.பன்னீர் செல்வம் அளித்த வாக்குமூலம்தான் ஹைலைட். சசிகலா மீது தனக்கு சந்தேகம் இல்லை என்றும் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகவே விசாரணை கோரியதாகவும் குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக வி.கே.சசிகலா, டாக்டர் சிவக்குமார், சுகாதாரத்துறை முன்னாள் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+