நான் சேரிலயா பிறந்தேன்?.. வலுக்கும் எதிர்ப்பு.. தலித் மக்களை இழிவுப்படுத்திய அர்னவ் கைதாகிறாரா?
சென்னை: நான் ஒன்னும் சேரியில் பிறக்கலை என தனது குடும்பச் சண்டையில் தலித் சமூகத்து மக்களை இழிவுப்படுத்தி பேசிய சீரியல் நடிகர் அர்னவை கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்துள்ளன.
சின்னத்திரை சீரியல் நடிகர் அர்னவ். இவர் செவ்வந்தி சீரியலில் நடித்து வரும் திவ்யாவுடன் லிவ் இன் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். பின்னர் கடந்த மாதம்தான் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
அர்னவ் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திவ்யாவை கட்டாயமாக மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து முஸ்லீம் முறைபடியும் இந்து முறைபடியும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

3 மாத கர்ப்பிணி
தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ள திவ்யா, திடீரென ஒரு பரபரப்பு புகாரை கூறியுள்ளார். அதாவது தன்னை அர்னவ் அடித்து துன்புறுத்துகிறார். செல்லம்மா சீரியலில் நடிக்கும் நடிகையுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். இதை தட்டி கேட்ட என் வயிற்றில் எட்டி உதைத்ததால் கரு கலையும் நிலை ஏற்பட்டுள்ளது என புகார் அளித்திருந்தார்.

குற்றச்சாட்டு
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுக்கும் அர்னவ், நடிகர் ஈஸ்வருடன் சேர்ந்து திவ்யாதான் எனது குழந்தையை கலைக்க பார்க்கிறார். திவ்யா என்னை ஏமாற்றிவிட்டார். அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது என அர்னவ் குற்றம்சாட்டினார். சக நடிகைகளும் அர்னவ் குறித்து நல்லமாதிரியான கருத்துகளை சொல்லவில்லை.

செய்தியாளர்கள் சந்திப்பு
இந்த நிலையில் அர்னவ் செய்தியாளர்கள் சந்திப்பின் போது எனது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு காரணம் நண்பர் ஈஸ்வர்தான். என் குடும்ப பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பது போல் என்னுடன் போனில் பேசுகிறார். அப்போது மிகவும் கொச்சையான வார்த்தைகள் பேசுகிறார். நானும் சேரியில் பிறக்கவில்லை, அவரும் சேரியில் பிறக்கவில்லை.

கைதாகிறாரா அர்னவ்?
அவர் படித்தவர், இது போல் பேசலாமா என்ற கேள்வி எழுப்பியிருந்தார். ஏற்கெனவே மனைவியை துன்புறுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அர்னவ் வாயை கொடுத்து மாட்டியுள்ளார். தலித் மக்கள் என்றால் படிக்காதவர்கள், கொச்சை வார்த்தைகளை பேசுவார்கள் என்ற பொருள்படும்படி கூறிய அர்னவ்வை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் விரைவில் அர்னவ் கைது செய்யப்படுவார் என்றே தெரிகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications