நள்ளிரவில் சோகம்! பிரபல சீரியல் நடிகை தேவிப்பிரியா சென்ற கார் விபத்து.. டிரைவர் சம்பவ இடத்திலேயே பலி
சென்னை: பிரபல சீரியல் நடிகை தேவிப்பிரியா, சாலை விபத்தில் உயிர் தப்பியுள்ளார். பெரம்பலூர் அருகே பஞ்சரான காருக்கு டயர் மாற்றும்போது பின்னால் வந்த வாகனம் மோதியதில் தேவிப்பிரியாவின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை தேவிப்ரியா தனது சொந்த ஊரான தேனிக்கு சென்னையில் இருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் பெரம்பலூர் அருகே பாடலூரில் அவரது கார் பஞ்சர் ஆகியுள்ளது. பஞ்சரான காருக்கு டயர் மாற்றும்போது பின்னால் வந்த வாகனம் மோதியதில் தேவிப்ரியா உயிர்தப்பியுள்ளார்.

நடிகை தேவிப்பிரியாவின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியை சோ்ந்த நடிகையின் ஒட்டுநா் முத்து கணேஷ் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிாிழந்தார். டிரைவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த தேவிபிரியாவின் உதவியாளா் தேனி மாவட்டத்தை சோ்ந்த திவாகர் படுகாயமடைந்தார்.
நடிகை தேவிபிரியா கொடுத்த தகவலின் போில், போலீசார் விரைந்து வந்தனர். படுகாயமடைந்த திவாகர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒட்டுநா் முத்து கணேஷ் உடல் பிரதேப் பாிசோதனைக்காக பெரம்பலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து பெரம்பலூா் போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
நடிகை தேவிப்பிரியா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் தனது முத்திரையைப் பதித்தவர். வாலி, காக்க காக்க, காதல் கொண்டேன், காதல், பெருசு, விருமாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ல வருடங்களாகப் பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் பல பிரபல நடிகைகளுக்கு குரல் கொடுத்து புகழ்பெற்றவர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications