சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செரோ சர்வே.. தமிழ்நாட்டில் 23% பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கலாம்.. திருவள்ளூரில்தான் அதிகம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மொத்தம் 23% பேருக்கு கொரோனாவிற்கு எதிரான ஆண்டிபாடி இருப்பதாக செரோ சர்வேவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் ஏற்பட தொடங்கியதில் இருந்து அதன் பரவல் குறித்து அறிவதற்காக செரோ சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு பகுதியில் குறிப்பிட்ட நபர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்து அவர்களின் உடம்பில் கொரோனாவிற்கு எதிரான ஆண்டிப்பாடி இருக்கிறதா என்று சோதனை செய்வார்கள்.

ஜெட் வேகம்.. 6 மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்து சாதனை.. டெல்லியில் லிட்டர் ரூ.95-ஐ தாண்டியது! ஜெட் வேகம்.. 6 மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்து சாதனை.. டெல்லியில் லிட்டர் ரூ.95-ஐ தாண்டியது!

ரத்தத்தில் கொரோனாவிற்கு எதிரான ஆண்டிபாடி இருந்தால் அவர்களுக்கு கொரோனா வந்து குணமாகி இருப்பதாக அர்த்தம். ஒருவரின் உடலில் இருக்கும் IgM அல்லது IgG ஆண்டிபாடி இருப்பதை வைத்து அவர்களுக்கு கொரோனா வந்துவிட்டு போய் இருக்கலாம் என்று உறுதி செய்யப்படும்.

 எப்படி?

எப்படி?

பொதுவாக ஒருவருக்கு கொரோனா வந்து சென்ற பின் 2 வாரத்தில் IgG ஆண்டிபாடி உருவாகும். பொதுவாக உடலில் செரோ சர்வேவில் எவ்வளவு IgG ஆண்டிபாடி இருக்கிறது என்றுதான் கண்டுபிடிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையில் எவ்வளவு பேருக்கு கொரோனா வந்துவிட்டது சென்றது என்று செரோ சர்வே மூலம் கண்டுபிடிக்கப்படும்.

இரண்டாவது சர்வே

இரண்டாவது சர்வே

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் இரண்டாவது செரோ சர்வே எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் இந்த சர்வே எடுக்கப்பட்டது. சென்னை தவிர தமிழகம் முழுக்க 765 கிளஸ்டர்களில் மொத்தம் 22904 பேரிடம் இந்த ரத்த மாதிரிகள் எடுத்த செரோ சர்வே எடுக்கப்பட்டது. இதில் 5316 பேருக்கு IgG ஆண்டிபாடி ரத்தத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

இதன் மூலம் தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மொத்தம் 23% பேருக்கு கொரோனாவிற்கு எதிரான ஆண்டிபாடி இருப்பதாக செரோ சர்வேவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் அலையில் இது 31% ஆக இருந்தது. அதிகபட்சமாக திருவள்ளூரில் 49% பேருக்கு கொரோனா ஆண்டிபாடி இருப்பதாக செரோ சர்வேவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9% பேருக்கு ஆண்டிபாடி இருப்பது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்

திருவள்ளூர்

செங்கல்பட்டில் 43%, காஞ்சிபுரத்தில் 38%, ராணிப்பேட்டையில் 38%, திருவண்ணாமலையில் 34%, வேலூரில் 33%, சேலத்தில் 29%, பெரம்பலூரில் 28%, திருபத்தூரில் 27%, நாமக்கல்லில் 26%, தருமபுரியில் 25% கிருஷ்ணகிரியில் 25%, திருநெல்வேலியில் 24%, திருப்பூரில் 23%, கன்னியாகுமரியில் 23% பேருக்கு கொரோனா ஆண்டிபாடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா

உருமாறிய கொரோனா

தமிழகத்தில் உருமாறிய கொரோனா முதல் செரோ சர்வேவில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இரண்டாவது சர்வேயில் தமிழகத்தில் இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை வேரியண்ட் கொரோனா உட்பட பல வகையான உருமாறிய கொரோனா வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

English summary
Sero Survey: Tamilnadu records 23% positivity in the 2nd phase of the survey. Thiruvallur tops with 49% sero positivity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X