சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நைட்டியுடன்.. கணவர்களுடன்".. மீண்டும் திமுகவுக்கு சிக்கல்?.. சாட்டையை சுழட்டும் சென்னை கார்ப்பரேஷன்

கவுன்சிலர்களுக்கு சென்னை மாநகராட்சி வார்னிங் தந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: மீண்டும் திமுக அரசுக்கு சிக்கல் ஒன்று வந்துள்ளது.. இதையடுத்து, சென்னை மாநகராட்சி சாட்டையை சுழட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவும் சரி, அதிமுகவும் சரி, எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் உள்ளாட்சியில் பெண் கவுன்சிலர்களின் செயல்பாடுகள் அவர்களது கணவரோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இருப்பதாக நீண்டகாலமாக இருந்து வருகிறது.

இதற்கு இரு கட்சிகளுமே விலக்கல்ல.. தற்போது திமுக ஆட்சியில் இது மீண்டும் வெளிவந்துள்ளது.. 10 வருடம் ஆட்சி இல்லாமல் திமுக அரியணை ஏறியுள்ளதால், இது சற்று அதிகமாக காணப்படுகிறது.

திருவாரூரில் டெல்டாவை கூட்டி மாஸ் காட்டிய பாஜக அண்ணாமலை- இலங்கை போல தமிழகம்...திமுக அரசுக்கு சாபம்!திருவாரூரில் டெல்டாவை கூட்டி மாஸ் காட்டிய பாஜக அண்ணாமலை- இலங்கை போல தமிழகம்...திமுக அரசுக்கு சாபம்!

 கனிமொழி

கனிமொழி

இப்படியெல்லாம் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், முதல்வர் ஸ்டாலினும், எம்பி கனிமொழியும் புதிதாக பதிவியேற்ற பெண் கவுன்சிலர்கள், மேயர்களுக்கு அறிவுரை தந்திருந்தனர்.. ஆனால், சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்துவிட்டன.. கணவர்கள் வைத்து மிரட்டுவது, அத்துமீறல், கவுன்சிலர்களே அடாவடித்தனம் செய்வது, நைட்டியுடன் கோயிலுக்குள் சென்று மிரட்டுவது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.. வழக்கம்போல் எதிர்க்கட்சிகளும் இதை விமர்சிக்க ஆரம்பித்து விட்டன.

 15 மண்டலங்கள்

15 மண்டலங்கள்

ஆயினும், சென்னையில் இந்த விவகாரம் தொடர்கிறது.. சென்னை மாநகராட்சி மண்டலக் கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் பங்கேற்றதாக மறுபடியும் சர்ச்சை உருவாகியிருக்கிறது.. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் மாநகராட்சிக்குக் கூட்டத்துக்கு முன்பாக மண்டலக் குழு கூட்டம் மற்றும் நிலைக்குழுக்கள் கூட்டங்கள் நடைபெற வேண்டும் என்பது விதிமுறை..

ஒப்புதல்

ஒப்புதல்

இப்படி மண்டல குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு நிலைக் குழுக்கள் மூலம் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, மாநகராட்சி கூட்டத்தில் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படும். முக்கியத்துவம் வாய்ந்த மண்டலக் குழு கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார்... இதன்படி சென்னையில் மண்டலக் குழு கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இப்படி சிறப்பு வாய்ந்த கூட்டங்களில் மண்டல குழு தலைவர், கவுன்சிலர்கள், அதிகாரிகள் தவிர்த்து வேறு யாரும் பங்கேற்க முடியாது.

கணவர்கள்

கணவர்கள்

ஆனால், சென்னை மாநகராட்சி மண்டலக் கூட்டங்களில் பெண் கவுன்சிலர்களின் கணவன்மார்கள் பங்கேற்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, தண்டையார்பேட்டை மண்டல குழு கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களின் கணவர்களே பங்கேற்றுள்ளது தெரிய வந்திருக்கிறது. பெண் கவுன்சிலர்களின் உரிமையைப் பறித்து கட்சி நிர்வாகிகளான கணவர்கள் செயல்படுவதும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

வார்னிங்

வார்னிங்

விதிகளை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே சென்னை மாநகராட்சி வார்னிங் தந்திருந்த நிலையில், இப்போது மறுபடியும் அதே போல சம்பவம் நடந்துள்ளது.. மண்டல குழு கூட்டங்களில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், நிச்சயம் இது தொடர்பாக மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இப்படிப்பட்ட தொடர் சம்பவங்களினால் திமுக தரப்பு அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.. எனவே கடிவாளத்தை மேலும் இறுக்கமாக்கும் அறிவிப்புகள் விரைவில் வரலாம் என்கிறார்கள்.

English summary
severe action if husbands of councilors attend zonal meetings, chennai corporation warning கவுன்சிலர்களுக்கு சென்னை மாநகராட்சி வார்னிங் தந்துள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X