ராத்திரியில்தான் அத்தனை லீலைகளும்.. எம்எல்ஏவை அம்பலப்படுத்தும் நாம் தமிழர் வக்கீல் அருள்
பெரம்பலூர் எம்எல்ஏ மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: "ஸ்டார் ஹோட்டல்ல அறை எண் 116-ல் கட்சி பெயரிலேயே ரூம் எடுத்திருக்கிறார்கள்.. ராத்திரி நேரத்தில்தான் அந்த எம்எல்ஏவின் லீலைகளே ஆரம்பமாகுது.. இனியும் இந்த மண்ணில் பெண்களுக்கு இப்படி ஒரு கொடுமை நிகழக்கூடாது" என்று வக்கீல் அருள் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி சம்பவத்தை போலவே பெரம்பலூர் மாவட்டத்திலும் பெண்களுக்கு எதிரான ஒரு அவலம் நடந்துள்ளது. அதிமுக எம்எல்ஏவே இந்த பாலியல் சமாச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதனை வெட்ட வெளிச்சமாக்கியவர் வக்கீல் அருள் என்பவர். இது சம்பந்தமாக மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார் அருள்.
மேலும் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அருள் பிரத்தியகே பேட்டி ஒன்றினை இது தொடர்பாக அளித்துள்ளார். அதில் அவர் சொல்லி இருப்பதாவது:

பெரிய அதிர்ச்சி
தொடர்ச்சியாக இது சில ஆண்டுகளாகவே நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுல ஆளும் கட்சியை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரே நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதுதான் பெரிய அதிர்ச்சி. மக்களுடைய பிரதிநிதிகளாக இருக்கக்கூடியவர்களே பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது பெரிய மனவலியை ஏற்படுத்தி உள்ளது.

அச்சுறுத்தல்
வேலை கேட்டு வரும் பெண்களை, ஆசைகாட்டி, கட்டாயப்படுத்தி அச்சுறுத்தி பாலியல் தொல்லைகளை தந்துள்ளார்கள். மேலும், ஆசைப்படும் பெண்களை இச்சைக்கு இணங்குமாறு சில ஆட்களை தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி உள்ளனர்.

அறை எண் 116
கேட்கும் பெண்களை, கேட்கும் நபர்களுக்கு கொண்டு போய் விட்டு வரும் புரோக்கர் வேலையையும் சேர்த்து பார்த்துள்ளனர். ஸ்டார் ஹோட்டல்ல அறை எண் 116-ல் கட்சி பெயரிலேயே ரூம் எடுத்திருக்கிறார்கள். தினமும் பல பெண்களை அழைத்து வந்திருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் ஈடுபட்டு இருந்திருக்கிறார். ராத்திரி நேரத்தில்தான் அந்தஎம்எல்ஏவின் லீலைகளே ஆரம்பமாகிறது.

மிரட்டுகிறார்கள்
2 நாளைக்கு முன்னாடிகூட பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் தர வந்தார். அவர் 2 குழந்தைகளுக்கு தாயார். கணவன் வெளிநாட்டில் இருக்கிறார். புகார் கொடுக்க முயன்ற பெண்ணை மிரட்டுகிறார்கள், மேலும் இவரோடு போ, அவரோடு போ என்று உறவு வைத்து கொள்ள சொல்லி உள்ளார்கள்.

பேரம் பேசுகிறார்கள்
இதனால் அந்த பெண் நேரடியாக போலீசுக்கு போய்விட்டார். அங்கு எம்எல்ஏ மீது புகார் சொல்லவும், போலீஸோ பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து கொண்டு அதே எம்எல்ஏவிடம் அழைத்து சென்று சமாதானம் பேசுகிறார்கள். பேரம் பேசுகிறார்கள். ஆனால் எதற்கும் மசியாத அந்த பெண் அழுது கொண்டே கிளம்பி சென்றுவிட்டார்.

கொடுமை நிகழ கூடாது
இதுபோல 15-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உறவினர்கள் சிலர் என்கிட்ட வந்து முறையிட்டு நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறார்கள். இது சம்பந்தமான ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்க போகிறோம். காவல்துறையும் விசாரணை நடத்த வேண்டும். இனியும் இந்த மண்ணில் பெண்களுக்கு இப்படி ஒரு கொடுமை நிகழக்கூடாது" என்றார்.

உரிய ஆதாரங்கள்
இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு, உரிய ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். அருள் தெரிவித்த அந்த ஸ்டார் ஹோட்டலில் விசாரணையும் ஆரம்பித்துள்ளனர். மேலும் ஹோட்டலின் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்துவருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications