சென்னை தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது பாலியல் புகார்.. 16, 17 வயது பெண்களை படுக்கைக்கு அழைத்தாரா?
சென்னை: பத்ம சேஷாத்ரி ராஜகோபாலனை தொடர்ந்து சென்னையில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீதும் பாலியல் தொல்லை புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தின் பிரபல தடகள பயிற்சியாளராக இருப்பவர் நாகராஜன். இவர் பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாதெமி என்ற தடகள பயிற்சி மையத்தை சென்னை பாரிமுனையில் வைத்து நடத்தி வருகிறார்.
பல முன்னணி தடகள வீரர்களை உருவாக்கிய இவர் ஏழை மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வயது வித்தியாசம்
14,15 வயது என வித்தியாசமே இன்றி நாகராஜன் பாலியல் சீண்டல் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த புகாரில் கூறியிருப்பதாவது: என்னுடைய ஜூனியரான 17 வயது பெண் என்னிடம் வந்து நாகராஜன் கொடுக்கும் பாலியல் தொல்லைகளை எடுத்துக் கூறினார்.

பெண்கள்
இதையடுத்து அவருக்கு எதிராக நான் குரல் கொடுத்தேன். அதைத் தொடர்ந்து பல பெண்களும் அவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாகக் கூறினார்கள். எங்களுக்குப் போதுமான ஆதரவு கிடைக்காததாலும் இனி அது போல் செய்ய மாட்டேன் என நாகராஜன் உறுதியளித்ததாலும் நாங்கள் அவரை விட்டுவிட்டோம்.

அத்லெட்டுகள்
அவரால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானவவர்கள் சிறப்பான அத்லெட்டுகள். அதிலிருந்து தப்ப அவர்கள் வேறு அகாதெமிக்கு செல்ல வேண்டும், இல்லாவிட்டால் விளையாட்டையே விட்டுவிட வேண்டிய சூழலுக்கு ஆளாகினர். கிராமத்து பெண்கள், வறுமையில் வாடும் பெண்கள் தங்களை காட்டிக் கொடுக்கமாட்டார்கள் என்பதால் அவர்கள் மீது நாகராஜன் குறிவைத்தார்.

உடலளவில்
ஏழை பெண்கள் அவரால் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டனர். நாகராஜன் சில பெண்களை உடலுறவுக்கும் கட்டாயப்படுத்தியுள்ளார். அவர்களை மாதக்கணக்கில் வைத்து துன்புறுத்தி வந்துள்ளார். ஒய்எம்சிஏவில் இருக்கும் அவர் வீட்டில் வைத்து துன்புறுத்தப்பட்ட என் ஜூனியர் ஒருவர் நாகராஜனை கொல்லவும் தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சி செய்துள்ளார். அப்போது அவருக்கு 16 அல்லது 17 வயதுதான் இருக்கும்.

அலுவலகம்
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் இருக்கும் அவருடைய அலுவலகத்தில் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போது அவரைப் பார்த்திருக்கிறேன். பயிற்சி முடிந்த பின்னர் எல்லாரையும் அனுப்பிவிட்டு ஒரு பெண்ணை மட்டும் அவர் சொல்வதையெல்லாம் செய்ய சொல்வார் . ஒரு நாள் அந்த பெண் அழுது கொண்டே என்னிடம் நடந்தவற்றை கூறினாள். ஆனால் அவருக்கு என்னால் உதவ முடியவில்லை என தெரிவித்துள்ளார் அந்த பெண்.

பாலியல் சீண்டல்களுக்கு மறுப்பு
நாகராஜனின் பாலியல் சீண்டல்கள் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு தடகள சங்கத்தில் ஒரு அத்லெட்டின் தந்தை புகார் அளித்திருந்தார். ஆனால் அந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த புகார்களை நாகராஜன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 30 ஆண்டுகளாக கோச்சாக இருக்கும் நாகராஜன் ஆண்டுக்கு 2 முதல் 3 பெண்களை அவர்களது நடத்தைகளுக்காக வெளியே அனுப்பிவிடுவதாகவும் அவர்கள்தான் இது போன்ற பாலியல் புகார்களை எழுப்பியதாகவும் கூறுகிறார்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications