“ஷாக்”.. பாலியல் புகாருக்கு ஆளான பிக்பாஸ் பெண் போட்டியாளர் மாயா! 5 ஆண்டுக்கு முன் நடந்தது என்ன?
சென்னை: விக்ரம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை மாயா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருக்கும் நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் தொடர்பான செய்திகள் தற்போது பகிரப்பட்டு வருகின்றன.
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 7 வது சீசன் தொடங்கியது. இதில் விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ள நடிகை மாயா கிருஷ்ணனும் போட்டியாளர்களில் ஒருவராக பங்கெடுத்து இருக்கிறார். போட்டி தொடங்கி 2 நாட்களே கடந்து இருக்கும் நிலையில் மாயா மீதான பாலியல் புகார் தொடர்பான செய்திகள் தற்போது பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தனியார் ஆங்கில நாளிதழின் இணையதளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி வெளியான செய்தியை அதிகம் பகிரப்படுகிறது. அதில் அனன்யா ராமபிரசாத் என்பவர் மாயா மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவை அந்த செய்தியில் பதிவிட்டு உள்ளனர்.
அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, "நாடக கலைஞரான மாயாவை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் முதலில் நான் சந்தித்தேன். எனக்கு அப்போது 18 வயது. மாயாவுக்கு 25 வயது. அவர் எனக்கு பயிற்சியாளராக இருந்தார். பின்னர் ஒரு கட்டத்தில் என்னை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் அவர் கொண்டு வந்துவிட்டார்.
பள்ளி பருவத்தில் இருந்து என்னுடன் நண்பர்களாக இருந்தவர்களை பிரித்துவிட்டார். நான் மற்றவர்களிடம் பேசக் கூடாது என எனக்கு உத்தரவிடுவார். எனது நண்பர்களிடம் என்னை பற்றி அவதூறுகளை சொன்னார். என்னை அவர்கள் வெறுக்கும் வகையில் செய்தார். ஒரு புள்ளியில் என்னை அவரது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். நான் மோசமான பாலியல் உறவுக்குள் சிக்கவைக்கப்பட்டேன்.." என்று குறிப்பிட்டு இருந்தார்.
அனன்யாவின் இந்த குற்றச்சாட்டு அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதற்கு அப்போதே அறிக்கை மூலமாக நடிகை மாயா கிருஷ்ணன் விளக்கம் அளித்து இருந்தார். அதில் அவர் தெரிவித்து உள்ளதாவது, "அந்த பேஸ்புக் கணக்கு சம்பவத்தின் உண்மைகளை திரித்து என்னை துஷ்பிரயோகி போல் காட்டி உள்ளது. இது உண்மை கிடையாது.
நான் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல தயாராக உள்ளேன். அதிகாரிகளுக்கும் அவர்கள் உண்மையைக் கண்டறிய எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். என்னை துஷ்பிரயோகம் செய்தவர் மற்றும் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்திய அமைப்புக்கு எதிராக ஏற்கனவே நான் வழக்கு தொடர்ந்து உள்ளேன், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அக்டோபர் 17, 2018 நிலவரப்படி என்னை இழிவுபடுத்தும் அனன்யாவின் பதிவு, என் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications