நித்யானந்தா 'அந்த விஷயத்தில்' வெறியர்.. சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் சீடர் பாலியல் புகார்
சென்னை: சாமியார் நித்யானந்தா மீது சென்னை காவல்துறை ஆணையர்அலுவலகத்தில் ஆண் சீடர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் புகார்கள், கடத்தல் புகார்கள், நில அபகரிப்பு, பணமோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்களால் வழக்குகளில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தா தினமும் புது புது புகார்களில் சிக்கி வருகிறார். அவரை கர்நாடகா மற்றும் குஜராத் போலீசார் கைது செய்வதற்காக தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆனால் சாமியார் நித்யானந்தா கைது நடவடிக்கைக்கு பயந்து இந்தியாவை விட்டு தப்பி சென்று வெளிநாட்டில் வசித்து வருகிறார். இருந்த போதிலும் சாமியார் நித்யானந்தாவை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டுவர தீவிர முயற்சி நடந்து வருகிறது. முதற்கட்டமாக நித்யானந்தாவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.

விரும்பி சேர்ந்தேன்
இந்நிலையில் நித்யானந்தா மீது தஞ்சையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் புகார் அளித்துள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, நித்யானந்தாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது ஆசிரமத்தில் 2009 ஆண்டு தான் தான் சேர்ந்ததாக கூறினார்.

350 இளைஞர்கள்
தனக்கு திருவாரூர், நாகை, வேதாரண்யம் ஆகிய மாவட்டங்களில் உள்ள நித்யானந்தாவின் மடங்களை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டதாகவும் விஜயகுமார் கூறினார். தான் மட்டும் 350 இளைஞர்களை ஆசிரமத்தில் சேர்த்ததாகவும், யோகா,தியானப்பயிற்சி என்ற போர்வையில் மோசடியில் ஈடுபட்டத்தை நாளடைவில் தான் தெரிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

ஓரினச்சேர்க்கை
நித்யானந்தா ஒரு செக்ஸ் வெறியர் என்று குற்றம்சாட்டிய விஜயகுமார், அந்த ஆசிரமத்தில் உள்ள பலர் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்றும் நித்யானந்தா தன்னை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்ததாகவும் புகார் கூறினார். மேலும் மாடல் அழகிகளை மயக்கி தனக்கு அனுப்புமாறு நித்யானந்தா தன்னிடம் கேட்டதாகவும் விஜயகுமார் பேட்டியின்போது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்ததார்.

கொலை மிரட்டல்
நித்யானந்தாவின் செயல்பாடுகள் பிடிக்காததால் 2015ம்ஆண்டு ஆசிரமத்தை வந்துவிட்டதாகவும் தன்னிடம் இருந்த 40லட்சம் மதிப்புள்ள நகைகள் நித்யானந்தாவிடம் உள்ளதாகவம் கூறிய விஜயகுமார், அதை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

நித்யானந்தா மடம்
நான் ஓரினச்சேர்க்கையாளன் என்றும் ஆசிரம பணத்தை கையாடல் செய்துவிட்டதாகவும் பொய் புகார்கள் கூறி வருகிறார்கள் என்று கூறிய விஜய குமார். நடிகை ரஞ்சிதாவின கண் அசைவில் நித்யானந்தா உள்ளார் என்றும், ரஞ்சிதாவின் கட்டுப்பாட்டில் தான் ஆசிரமத்தின் மொத்த கட்டுப்பாடும் உள்ளதாகவும் தெரிவித்தார்.

போலீஸ் உறுதி
நித்யானந்தா தன்னுடன் பேசிய செக்ஸ் உரையாடல்கள் உள்பட பல்வேறு ஆதரங்க தன்னிடம் உள்ளதாக தெரிவித்த விஜயகுமார் தேவைப்பட்டால் இதனை நீதிமன்றத்தில் சமர்ப்பின்பேன் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தார்கள் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications