"சில்மிஷம்".. சட்டென நடுரோட்டில்.. பெண்ணை கட்டிப்பிடித்த "காமுகன்".. அட இவரா? அதிர்ந்த மடிப்பாக்கம்
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார்
சென்னை: சென்னையில் தனியாகச் சென்ற பெண் ஒருவரைக் கட்டிப் பிடித்து ரகளையில் ஈடுபட்ட பேராசிரியர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அடையாறு பகுதியில் அந்த பெண் வசித்து வருகிறார்.. இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு, மடிப்பாக்கம் பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்..
அப்போது சாலையில், இன்னொரு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், பெண்ணின் டூவீலர் மோதி இடித்துவிட்டார்.. இதனால், அந்த பெண், டூவீலருடன் கீழே விழுந்தார்..

சீண்டல்
உடனே இந்த இளைஞர் பதறிப்போய், அந்த பெண்ணை தூக்கிவிடுவதாக போல சென்று, டக்கென கட்டிப்பிடித்து கொண்டார்.. இதனால் அதிர்ந்து போன் அந்த பெண், அந்த இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.. உடனே அந்த இளைஞர் ஆத்திரம் அதிகமாகி, பெண்ணை கடுமையாக தாக்க தொடங்கினார்.. தலை, கால், உடம்பு என எல்லா இடங்களிலும் சரமாரியாக தாக்கினார்.. இதில் நிலைதடுமாறி மீண்டும் அந்த பெண் கீழே விழுந்துவிட்டார்.. உடனே இளைஞரும், அந்த பெண்ணின் மீது படுத்து, அவரை சீண்டிக்கொண்டே தாக்கினார்.

மடிப்பாக்கம்
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கேமராவில் பதிவாகிவிட்டது.. இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண், மடிப்பாக்கம் காவல் ஆணையரிடம் புகார் தந்தார்.. அந்த புகாரில், "மடிப்பாக்கம் ராம் நகரில் தனியாக டூவீலரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

கட்டிப்பிடித்து
அப்போது, அந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்ததும் இல்லாமல், பைக்கில் வந்த அந்த நபர் வேண்டுமென்றே, அவரை இடித்துத் தள்ளிவிட்டு அவருக்கு உதவி செய்வது போல அவரை கட்டியணைக்க முயன்றது தெரியவந்தது.. மேலும், அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக்கவும், அவரை கடுமையாக தாக்கும் காட்சிகளும் சிசிடிவி காட்சியில் இடம் பெற்றிருந்தன.. இதைத்தொடர்ந்து அவர் சென்ற ரூட்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, அவர் யார் என கண்டறிந்தனர். இறுதியில் அவர் வேளச்சேரியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பது தெரியவந்துள்ளது.

கட்டியணைத்த டீச்சர்
இவர் தனியார் காலேஜில் துணைப் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறாராம்.. இவருக்கு சரவணன் என்று இன்னொரு பெயர் உள்ளதாம்.. அவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சிசிடிவி காட்சிகள்தான் இப்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கூட்டி வருகிறது.. கைதானவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. அந்தநேரத்தில் தண்ணி அடித்திருந்ததால், தெரியாமல் கட்டிப்பிடித்து விட்டதாகவும், போதையில் பெண்ணை தாக்கிவிட்டதாகவும் வாக்குமூலம் தந்துள்ளார்.. பெண்ணை கட்டிப்பிடித்து, தகாத முறையில் நடந்து கொண்டது, கல்லூரி பேராசிரியரா என்று அதிர்ந்து போயுள்ளனர் இணையவாசிகள்.

இரும்பு கேட்
அதைவிட சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களும், இவரை அடையாளம் கண்டு, அதற்கு மேல் விக்கித்து போயுள்ளனராம். மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாததை அறிந்துதான், அந்த பெண்ணின் பின்னாடியே வந்துள்ளதாக தெரிகிறது.. பெண்ணின் டூவீலரில் இடித்து கீழே தள்ளியபோது, மழையால் சேறும் சகதியுமாக இருந்த இடத்தில் அந்த பெண் விழுந்துள்ளார்.. கீழே விழுந்துவிட்டதால், அங்கு சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் சுத்தம்செய்யும்போது, பேராசிரியர் ஓடிவந்து பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.. பெண் எதிர்ப்பு தெரிவிக்கவும், அங்கிருந்த ஒரு வீட்டின் இரும்பு கேட்டில், அந்த பெண்ணின் தலையை பிடித்து பலமாக பலமுறை இடித்து தாக்குகிறார்.. இந்த காட்சிதான் காண்போரை பதற வைத்து வருகிறது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications