7 வயசு சிறுவனுக்கு சாக்லெட் கொடுத்து.. 42 வயசு ஆசாமியின் அசிங்க செயல்.. 10 வருடம் ஜெயில்!
7 வயது சிறுவனுக்கு சில்மிஷம் தந்த நபருக்கு 10 வருட தண்டனை வழங்கப்பட்டுள்ளது
சென்னை: 7 வயசு சிறுவனுக்கு சாக்லெட் கொடுத்து, சில்மிஷத்தில் ஈடுபட்டு தவறாக நடந்து கொண்ட 42 வயசு ஆசாமிக்கு 10 வருடம் ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது.
சென்னை, வியாசர்பாடியை சேர்ந்தவர் சாரங்கபாணி. சாமந்தி பிளவர் காலனியில் வசித்து வந்தார். வயசு 42 ஆகிறது. இவர் தன் வீட்டு அருகே இருந்த 7 வயசு சிறுவனை தனியாக அழைத்து சென்றார்.

அவனுக்கு ஒரு சாக்லெட்டையும் தந்து, ஆசையாக பேசி தவறாக நடந்து கொண்டார். மேலும் சிறுவனையும் தவறு செய்ய கட்டாயப்படுத்தி உள்ளார்.
பின்னர், இது பற்றி வீட்டிலோ, வெளியிலோ யார் கிட்டயும் சொல்லக்கூடாது என்றும், அப்படி சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். ஆனால் சிறுவனோ வீட்டில் வந்து பெற்றோரிடம் கதறி கொண்டே இதை பற்றி சொல்லி உள்ளான். ஆத்திரம் அடைந்த பெற்றோர், உடனடியாக எம்கேபி நகர் போலீசில் புகார் தந்தனர்.
போலீசாரும் சாரங்கபாணியை பிடித்து விசாரணை நடத்தியதில் சிறுவனிடம் தப்பாக நடக்க பார்த்ததும், கொலை செய்வதாக மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சாரங்கபாணியை ஜெயிலில் அடைத்தனர். கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சம்பவம் இது.
எனினும் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் சென்னை மகளிர் கோர்ட்டில், நீதிபதி மஞ்சுளா முன்பு வழக்கு விசாரணைக்கு மீண்டும் வந்தது. வாதங்கள் முடிவடைந்த நிலையில், சாரங்கபாணி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக மஞ்சுளா அதிரடியாக உத்தரவிட்டார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications