அண்ணாமலையை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாரு சண்முகம்.. பெரிய தப்புங்க! ஆதாரத்தோடு போட்டுடைத்த சிபிஎம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத மோதல் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பிரசாரம் செய்து கொண்டிருந்த பாஜவின் அப்போதைய மாநில தலைவர் அண்ணாமலையும், சங்பரிவார அமைப்புகளும் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தஞ்சை மாணவி லாவண்யா விவகாரத்தில் கேட்டுக் கொண்டுள்ளார் கம்யூனிஸ்ட் கட்சியின் சண்முகம்..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Shanmugam Tears Into Annamalai

நாமக்கல்லில் நடைபெற்ற அக்கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், கட்சியின் முக்கிய முடிவுகளை அறிவித்தார்.

திமுகவுடன் பேச்சுவார்த்தை

சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், சாமுவேல்ராஜ், கண்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளுக்காக மாநில செயற்குழு உறுப்பினர் வாசுகி தலைமையில் மற்றொரு குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலக்கத் தொகுதிகள் இலக்கு

இந்த முறை தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட கட்சி முடிவு செய்துள்ளதாக பெ.சண்முகம் தெரிவித்தார். குறிப்பாக, திமுக கூட்டணியில் இரட்டை இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகளைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தைக் குழுவின் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மாற்றுத் திறனாளிகள் விவகாரம்

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்புத் தொகை கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருப்பது வருத்தமளிப்பதாக கூறிய மூத்த தலைவர் சண்முகம், பராமரிப்புத் தொகையை உயர்த்தக் கோரிப் போராடிய மாற்றுத் திறனாளிகளை நள்ளிரவில் கைது செய்தது மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்றும், இதற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்

அதேபோல தஞ்சை மைக்கேல்பட்டி லாவண்யா வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையைச் சுட்டிக்காட்டிய அவர், "லாவண்யா மதமாற்றம் செய்யப்படவில்லை என்பதும், அந்தப் பள்ளியில் யாரும் மதமாற்றம் செய்யப்படவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. எனவே, இது குறித்துப் பொய்யான தகவல்களைப் பரப்பி மக்களிடையே பகையை உண்டாக்க முயன்ற பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என செய்தியாளர்களிடம் பேசும்போது வலியுறுத்தினார்.

இதனிடையே, தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் அண்ணாமலையும், சங்கபரிவார அமைப்புகளும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தனிப்பட்ட முறையில் அறிக்கை வெளியிட்டு அதன் மூலமும் வலியுறுத்தியுள்ளார்.

மாணவி லாவண்யா

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல் பட்டியில் உள்ள ஒரு கிறிஸ்தவ அமைப்பால் நடத்தப்படுகிற பள்ளியில் பயின்று வந்த லாவண்யா என்ற மாணவி, 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலையும், விசுவ இந்து பரிசத், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும் அது ஒரு மதமாற்ற நிர்பந்தத்தினால் ஏற்பட்ட தற்கொலை என்று பேசியதோடு, கிறிஸ்தவ சேவை அமைப்புகளின் மீது வன்மத்தை கக்கிக் கொண்டிருந்தனர். பாஜ தலைவர் நட்டா உத்தரவின் பெயரில் பாஜக தேசிய விசாரணை குழுவும் வந்து சென்றது.

மதமாற்ற முயற்சி காரணமில்லை

இதையொட்டி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் சிபிஐ விசாரிக்கட்டும் என்று உத்தரவிட்டார். இப்போது இந்த வழக்கில் சிபிஐ தனது முடிவுகளை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. அதில், லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்ற முயற்சி காரணம் இல்லை.

மாணவி பேசிய எந்த ஒரு வீடியோவிலும் மத மாற்றம் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை, 2010ம் ஆண்டு முதல் பள்ளியில் படித்து வெளியேறிய மாணவர்களின் சான்றிதழை ஆய்வு செய்ததில் ஒருவர் கூட மதம் மாறவில்லை, லாவண்யாவின் சித்தி, தந்தை ஆகியோர் பாஜக தலைவர்களின் நிர்ப்பந்தத்தால் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று தனது முடிவுகளை சமர்ப்பித்துள்ளது.

எனவே, இந்த பிரச்சனையை மத மோதல் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பிரசாரம் செய்து கொண்டிருந்த பாஜவின் அப்போதைய மாநில தலைவர் அண்ணாமலையும், சங்பரிவார அமைப்புகளும் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+