சபரிமலையில் கடுமையான கூட்டம்.. தமிழக பக்தர் மயங்கி விழுந்து பலி!
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற தமிழக பக்தர் உயிரிழந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 50 வயதான முரளி என்பவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோவையைச் சேர்ந்த முரளி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சபரிமலையில் இதுவரை மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளம். வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் வருகை தருவது வழக்கம். கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் தினசரி லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே 50,000 க்கும் அதிகமான பக்தர்கள் சாமி ஐயப்பனை தரிசிக்க காத்திருந்தனர். நவம்பர் 17 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஆன்லைன் புக்கிங் மூலம் கூட்டத்தை கட்டுப்படுத்தினாலும் ஸ்பாட் புக்கிங்கில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த பெண் பக்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சில பக்தர்கள், குழந்தைகள் என பலரும் மூச்சு திணறலால் அவதிப்பட்டதாக புகார் எழுந்தது.
இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் நிம்மதியாக சென்று ஐயப்பனை தரிசனம் செய்யவும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தேவசம்போர்டு உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 20,000ல் இருந்து 5000 ஆக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications