Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குளிக்க போன தீபா.. உள்ளாடையை வாயில் திணித்து.. 2020-ஐ வெலவெலக்க வைத்த "நிர்வாண" சம்பவங்கள், கொலைகள்

சென்னையில் பசியால் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மறக்க முடியாது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வருடம் எத்தனையோ கொலைகள், கொலைகள் போன்ற வன்முறைகள் நடந்துள்ளன.. ஆனால், "நிர்வாண" நிலையில் ஒருவரை இட்டு சென்று அதன்பிறகு அவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியது உச்சக்கட்ட கொடூரம்.. இதில் கொலைகள் முதல் அறியாமை வரை அடக்கம்! அந்த வகையில், இந்த வருடம் மக்களை அதிகம் பாதித்த சில செய்திகளைதான், இப்போது மறுபடியும் நினைவுகூர்ந்து பார்க்க போகிறோம்.

வழக்கமாக, சென்னை ராயப்பேட்டையில் இரவு நேரம் என்றாலும் மக்கள் நடமாட்டம் ஆங்காங்கே இருக்கும்.. இந்த பகுதியில் போலீசாரும் எந்நேரமும் விழிப்புடன் தீவிர கண்காணிப்பிலேயே பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.
அந்த வகையில் ஜனவரி மாதம் ஒருநாள், விடிகாலை 3 மணி இருக்கும்.

புதுக்கல்லூரி அருகே ஒரு இளம்பெண் நடந்து சென்றுள்ளார்.. உடம்பில் டிரஸ்ஸே இல்லை.. அவருக்கு வயது 20... நிர்வாணமாக அவர் நடந்து சென்றதை கண்டு ரோந்து சென்று கொண்டிருந்த போலீசார் பதறிவிட்டனர்.

 போலீசார்

போலீசார்

உடனடியாக கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து தகவல் சொன்னார்கள்.. அதன்படி ராயப்பேட்டை உதவி ஆய்வாளர் ஜெயராமன் விரைந்து வந்து, கையில் கொண்டுவந்திருந்த துணியை எடுத்து நடந்து வந்த இளம்பெண்ணுக்கு போர்த்திவிட்டார். அதன்பிறகு அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்த அந்த பெண் தெலுங்கில் பேசி உள்ளார்.

உதவி

உதவி

தமிழ் உட்பட எந்த மொழியும் தெரியவில்லை.. கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவும் பேசினாராம்.. விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே வயிறு வலிக்கிறது என்று சொல்லி அழ ஆரம்பித்துவிட்டார். யாரோ அவரை ஏமாற்றி பலாத்காரம் செய்துவிட்டு, இப்படி நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.. பிறகு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை தந்து அரசு பெண்கள் காப்பகத்தில் சேர்த்துவிட்டனர். அது சம்பந்தமாகவும் விசாரணை நடந்து வந்தது.

 தீபா

தீபா

அதேபோல, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஒரு சம்பவம் நடந்தது.. மாடு மேய்க்க போன 25 வயது தீபா என்பவர் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார்.. காப்புக் காட்டில் தீபாவின் பாவாடையை கழட்டி, அதை அவர் வாயிலேயே திணித்து பலாத்காரம் யாரோ செய்துள்ளனர்.. இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தியபோது, போலீசாருக்கே அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.. 25 வயசு தீபாவை 17 வயசு அருண் என்ற சிறுவன் பலாத்காரம் செய்து கொன்றதை அறிந்து கொல்லி மலையே ஆடிப்போய் விட்டது.

கொலையாளி

கொலையாளி

இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு, தீபா ஓடையில் குளிப்பதை மறைந்து நின்று அருண் பார்த்துள்ளான்.. அருகே சென்று, தன் ஆசைக்கு இணங்குமாறு அழைக்கவும் செய்திருக்கிறார்... அதிர்ச்சி அடைந்த தீபா, அருண் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்து, வார்ன் செய்துவிட்டு வீட்டுக்கு விரட்டி விட்டுள்ளார். இதை மனசில் வைத்துதான் அருண் ஒருவாரம் கழித்து கொலை செய்யும் வரை சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதில் கொடுமை என்னவென்றால், அருண் மைனர் என்பதால் சிறைக்கும் அனுப்ப முடியாமல் போய், சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

 வெளிநாட்டு பெண்

வெளிநாட்டு பெண்

அதேபோல, ஜனவரியில் மற்றொரு சம்பவம் பெங்களூருவில் நடந்தது. கிழக்கு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு ஒரு பெண் வேலை விஷயமாக வந்துள்ளார்.. டொட்டபல்லபுர ரோட்டில், ஒரு டாக்ஸியில் ஏறியுள்ளார்.. அந்த டாக்ஸியில் ஏற்கனவே 3 இளைஞர்கள் உட்கார்ந்திருந்தனர்... வெளிநாட்டு பெண் என்று தெரிந்தும் இந்த இளைஞர்கள் வேலையை காட்டி உள்ளனர்.. அந்த பெண்ணிடமிருந்து நகை, பணம், செல்போனை பிடுங்கி கொண்டு, அவரது டிரஸ்களை கழட்ட சொல்லி.. நிர்வாணமாகவே நடுரோட்டில் தூக்கி எறிந்தனர்.

 நிர்வாணம்

நிர்வாணம்

அப்போது நேரம் விடிகாலை 4 மணி! உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் அந்த பெண்ணுக்கு எங்கே போவது, எப்படி போவது என்றே தெரியாமல், புது நாட்டில், புது ஊரில் தடுமாறி நடந்தே நிர்வாணமாக சென்றிருக்கிறார்.. பக்கத்தில் ஒரு பண்ணை வீடு இருந்திருக்கிறது.. அவர்களிடம் நிர்வாணமாகவே போய் நின்று, டிரஸ் ஏதாவது இருந்தால் தருமாறு உதவி கேட்டு, அதை வாங்கி போட்டுக் கொண்டு, ஸ்டேஷனுக்கு போய் புகார் தந்தார்..

விசாரணை

விசாரணை

இந்த சம்பவங்கள் எல்லாம் ஒரு உதாரணங்கள்தான்.. சிறுவன் முதல் சிறுமி வரை பலர் நிர்வாண நிலையிலேயே சடலமாக கொலை செய்யப்பட்டனர்.. அது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது.. ஆனால், நாடு மிக மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது.. பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாக உள்ளது.. இதில் முதலில் டாப் லிஸ்ட்டில் உள்ள மாநிலம் உத்திரபிரதேசம்தான்.. வடமாநிலங்களில் பெண் குழந்தைகளின் நிலைமை பரிதாபம்தான்.. இதுபோன்ற பாலியல் குற்றங்களை செய்பவர்களை கைது செய்வதுடன், அதற்கான சட்டங்களையும் மிக கடுமைப்படுத்த வேண்டி உள்ளது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+