சைதாப்பேட்டையில் அதிர்ச்சி!.. மா. சுப்பிரமணியன் தோல்வி.. தவெக வேட்பாளர் வெற்றி
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சென்னையின் முக்கிய தொகுதியாகக் கருதப்படும் சைதாப்பேட்டையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. திமுகவின் வலுவான கோட்டையாக கருதப்பட்ட இந்த தொகுதியில், கடும் போட்டிக்குப் பிறகு திமுக வேட்பாளர் மா. சுப்பிரமணியன் தோல்வியடைந்துள்ளார். தவெக சார்பில் போட்டியிட்ட அருள் பிரகாசம் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். திமுக சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் போட்டியிட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தமிழன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஸ்ரீவித்யா மற்றும் தவெக சார்பில் அருள் பிரகாசம் ஆகியோர் முக்கிய போட்டியாளர்களாக இருந்தனர்.

சைதாப்பேட்டை தொகுதியில் 98,535 ஆண் வாக்காளர்கள், 1,05,549 பெண் வாக்காளர்கள் மற்றும் 62 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 2,04,146 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 74.84 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
கடந்த 2021 தேர்தலில் மா. சுப்பிரமணியன் 29,408 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்ததால், இந்த முறையும் அவருக்கே சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை நிலைமை மாறி, தவெக வேட்பாளர் அருள் பிரகாசம் 24,451 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று இறுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம், திமுகவின் பாரம்பரிய ஆதிக்கம் கொண்ட சைதாப்பேட்டை தொகுதியில் புதிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. தவெக கட்சியின் எழுச்சியை இந்த முடிவு தெளிவாக காட்டுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications