ஊதுபத்தி வாசம்.. சிகரெட் காயம்.. சென்னை பணிப்பெண் கொலை திக்திக்.. இந்த 3 விஷயம்தான் அதிர்ச்சியே!
சென்னை: சென்னையில் மைனர் பணிப்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளன. முக்கியமாக இந்த கொலை தொடர்பான 3 விஷயங்கள்.. மக்கள் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
சென்னையில் 15 வயது வீட்டுப் பணிப்பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்ததாக கூறப்படும் வழக்கில் தொடர்புடைய தம்பதியை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

போலீசாரின் கூற்றுப்படி, மைனர் சிறுமி கடுமையாக கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.
சூடான இரும்பு மற்றும் சிகரெட் துண்டுகளால் ஏற்படுத்தப்பட்ட தீக்காயங்கள் அந்த சிறுமியின் உடலில் இருந்து உள்ளது. அந்த சிறுமி தஞ்சாவூரை சேர்ந்தவர். பழைய வாகனங்களை வாங்கி விற்கும் முகமது நிஷாத் மற்றும் நசியா தம்பதி வீட்டில் அவர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1 வருடமாக அவர் அங்கே பணியாற்றி வந்துள்ளார்.
இந்த 1 வருடத்தில் கடந்த 4 மாதங்களாக அவர் கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார், அமைந்தகரை பகுதியில் உள்ள மேத்தா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது.
அந்த சிறுமிக்கு உணவு கொடுக்காமல்.. கடுமையாக வேலை வாங்கி கொடுமை செய்துள்ளனர். இரவு நேரத்தில் தூங்க கூட விடாமல் கடுமையாக கொடுமை செய்துள்ளனர். தீபாவளி , பொங்கலுக்கு கூட விடுமுறை தராமல் கொடுமை செய்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் வீட்டில் மகனுக்கு வைத்திருந்த உணவில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டதாக அந்த சிறுமியை அடித்தே கொலை செய்துள்ளனர்.
தீபாவளியன்று சிறுமியை கொன்று குளியலறையில் போட்டுவிட்டு, துர்நாற்றம் வீசாமல் இருக்க ஊதுபத்தி ஏற்றிவைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த சிறுமிக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்ட நிலையில்.. ஒரு வாய் எடுத்து சாப்பிட்டதற்கு இப்படி கொடூரமாய் கொலை செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட தம்பதிகள், முகமது நிஷாத் மற்றும் நசியா என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
வீடு முழுக்க அகர்பத்தி ஏற்றிவைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.
சிறுமியின் உடலை தங்கள் கழிப்பறையில் விட்டுவிட்டு அந்த இரண்டு பேரும் உறவினரின் வீட்டிற்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. முதலில் கொலையில் இருந்து தப்பிக்கவே முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களின் வழக்கறிஞர் சரண்டர் ஆவதே சரி என்று அறிவுரை செய்துள்ளார். இதையடுத்து இந்த மரணம் குறித்து அவரது வழக்கறிஞர் போலீசாருக்கு தகவல் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 அதிர்ச்சி: சென்னையில் மைனர் பணிப்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளன. முக்கியமாக இந்த கொலை தொடர்பான 3 விஷயங்கள்.. மக்கள் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
1. மைனர் பெண் எப்படி பணிக்கு வைக்கப்பட்டார்.
2. ஒரு வேலை செய்யும் பெண்ணுக்கு உணவு கூட கொடுக்காமல் சித்திரவதை செய்தது எப்படி?
3. சிறுமியின் உடலில் சிகரெட் காயங்கள் ஏற்படும் அளவிற்கு.. எப்படி கொடுமை செய்ய முடியும். அந்த அளவிற்கு முகமது நிஷாத் மற்றும் நசியா நடந்து கொண்டது எப்படி என்று கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications