"மதுரவாயல்" பைபாஸில் "சாந்தி".. இருட்டில் வழிமறித்த 2 திருநங்கைகள்.. அலறிய கடலூர் இளைஞர்: சிசிடிவி
கடலூரில் 2 திருநங்கைகள் இளைஞரை அடித்து செல்போனை பறித்துள்ளனர்
சென்னை: கடலூர் ரோட்டில், 2 திருநங்கைகள் செய்த அட்டகாசம் சிசிடிவி காட்சியாக வெளியாகி அதிர்ச்சியை கூட்டி உள்ளது.
இரவு நேரங்களில், ஹைவேஸ்களில் நிறைய வழிப்பறிகள், கொள்ளைகள் நடப்பது வழக்கம்.. முன்பெல்லாம், நெடுஞ்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், இதுபோன்ற திருட்டுகள் நிறைய நடந்து வந்தன.
ஆனால், சமீபகாலமாகவே, பெரும்பாலும் பல இடங்களில் சிசிடிவிகள் பொருத்தப்பட்டுள்ளதால், வழிப்பறிகள் ஓரளவு குறைய ஆரம்பித்துள்ளன..

கோயம்பேடு பைபாஸ்
கடந்த 2 மாதத்துக்கு முன்புகூட சென்னை மதுரவாயல் பைபாஸ் பகுதியில் நிறைய வழிப்பறி சம்பவங்கள் நடந்ததாக செய்திகள் வெளிவந்தன.. அதிலும் ஒரு பெண் வசமாக சிக்கினார்.. மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் வானகரம் டோல்கேட் அருகே அந்த இளம்பெண் நள்ளிரவு 1 மணிக்கு நின்று கொண்டிருந்தார்.. அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்துள்ளது.. அந்த காரை கைகாட்டி மறித்து நிற்க செய்து உதவி கேட்டார் அந்த பெண்.. தனியாக ஒரு பெண் நிற்பதை பார்த்ததும், உதவி செய்யும் நோக்கில் அந்த டிரைவரும் காரை நிறுத்தினார்.

சைரன் சத்தம்
உடனே இந்த பெண் காருக்குள் ஏறி உட்கார்ந்ததுமே, திபுதிபுவென்று 4 பேர் காருக்குள் ஏறிவிட்டனர்.. டிரைவரின் கழுத்தில் கத்தியை வைத்து, பணம் கேட்டு மிரட்டியதுடன் அவர் வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டனர். அந்த வழியாக சென்ற சக கார் டிரைவர்கள் இதை பார்த்த அதிர்ந்துபோய், உடனடியாக ரோந்து போலீசாருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்தனர்..ஆனால், சைரன் சத்தம் கேட்டதும், 4 பேரும் எகிறி தப்பி ஓடவிட, ஆனால், அந்த பெண், மட்டும் கோயம்பேட்டை சார்ந்த அவர் பெயர் சாந்தி...

மிட்நைட் அக்கிரமம்
வானகரம் டோல் கேட் அருகே, நடுராத்திரி பைபாஸ் சாலையில் இப்படி வழிப்பறி செய்வதுதான் சாந்தியின் தொழிலாம்.. சாந்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டாலும்கூட, தமிழகத்தின் வேறு சில இடங்களிலும் இப்படியெல்லாம் அட்டகாசங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. அதிலும் இரவு நேரங்களில், தனியாக ஆண்கள் நடந்து சென்றால், இப்படியான சம்பவங்களில் சிக்கி கொள்வது தொடர்கதையாகி வருகிறது.. இதோ இன்றைக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கூட்டி வருகிறது.. கடலூர் அண்ணா மேம்பாலத்தில் இருந்து கம்பியம்பேட்டை செல்லும் இணைப்பு சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. ரோட்டில் ஒரு இளைஞர் சென்று கொண்டிருக்கிறார்.. அப்போது 2 திருநங்கைகள் அந்த இளைஞரின் அருகில் வந்து அவரை வழிமறிக்கிறார்கள்..

சேலை + சுடிதார்
ஒருவர் நடுத்தர வயதுடன் சேலை அணிந்துள்ளார்.. இன்னொரு இளம்பெண் சுடிதார் அணிந்துள்ளார்.. இரு திருநங்கைகளும், இளைஞரின் செல்போனை பறிக்க முயல்கின்றனர்.. அதற்கு அந்த இளைஞர் எதிர்ப்பு தெரிவிக்கவும், அவரது சட்டையை இழுத்து பிடித்து, சரமாரி தாக்குகிறார்கள்.. அவரது தலைமுடியை கெட்டியாக பிடித்து கொண்டு, இருவரும் மாறி மாறி அடிக்கிறார்கள்.. பிறகு, கீழே கிடந்த ஒரு பெரிய குச்சியை எடுத்து வந்து, மறுபடியும் அந்த இளைஞரை தாக்குகிறார்கள்..

கிழிந்த ஷர்ட்
வலி பொறுக்க முடியாமல், அந்த இளைஞர் கதறுகிறார்.. இந்த சம்பவம் இரவு நேரத்தில் நடந்தாலும், ரோட்டில் நிறைய பேர் சென்று கொண்டிருக்கிறார்கள்.. அனைவருமே வேடிக்கை பார்த்து கொண்டே செல்கிறார்களே தவிர, ஒருத்தரும் வந்து இதை தடுக்கவில்லை.. தட்டிக் கேட்கவுமில்லை.. இவர்கள் செய்த அட்டகாசத்தினால், கடைசியில் அந்த இளைஞரின் சட்டை கிழிந்துவிட்டது.. செல்போனையும் பறித்துகொண்டு அந்த இளைஞரை, 2 திருநங்கைகளும் ஓட ஓட விரட்டியடிக்கிறார்கள்.. அங்கிருந்த சிசிடிவியில் இந்த காட்சிகள் மொத்தமும் பதிவாகி, காண்போரை அதிர செய்துள்ளது.. இது போன்ற நிகழ்வுகளை போலீசார் தடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்களின் வேதனை கோரிக்கையும் வெடித்து கிளம்பி உள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications