கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. திறக்குற நேரம் பார்த்து.. இப்படி ஒரு சிக்கலா.. ஷாக்கான மக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ள நேரம் பார்த்து வெளியான முக்கியமான செய்தி ஒன்று மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தற்போது இறுதிக்கட்ட பணிகளை நெருங்கி உள்ளது. அடுத்த மாதம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் பல்வேறு காரணங்களுக்காக தாமதம் ஆனது.

Shocking news to the people just ahead of the opening of Kilamakkam Bus Stand

எடப்பாடி ஆட்சி காலத்தில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் கொரோனா காரணமாக தாமதம் ஏற்பட்டது. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தது இந்த பேருந்து நிலையம் முறையான திட்டமிடல் இன்றி கட்டப்பட்டது உறுதி செய்யபட்டது. முக்கியமாக பேருந்து நிலையம் உள்ளேயே தண்ணீர் தேங்கும் பிரச்சனைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பேருந்து நிலையம் கொஞ்சம் கூட திட்டமிடல் இன்றி கட்டப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர் பாபுவும் சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்து இருந்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் பேருந்து நிலையத்தை தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

சிக்கல்: இந்த பேருந்து நிலையம் மெட்ரோவோடு இணைக்கப்படவில்லை. இதனால் மக்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகும் வாய்ப்புகள் உள்ளன. மின்சார ரயிலில்தான் மக்கள் இந்த பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் சூழல் உள்ளது.

ஏர்போர்ட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ காட்டப்படும் என்று 2021 ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இங்கே மெட்ரோ பணிகளை தீவிரப்படுத்துவோம் என்று அரசு அறிவித்தது. ஆனால் இந்த 15.3 கிமீ தூரத்திற்கான திட்டம் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது .

ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) இந்த 15.3 கிமீ திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) சமர்ப்பித்துள்ளது. இது சென்னை விமான நிலையத்தில் தொடங்கி ஜிஎஸ்டி சாலை வழியாக வரவிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை செல்லும் பாதை ஆகும். ஆனால் இதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

4,080 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்த பாதை பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் உள்ளிட்ட பல முக்கிய இடங்கள் வழியாக செல்லும். இந்த பாதை மொத்தம் 12 ரயில் நிலையங்களை உள்ளடக்கியது.

டிபிஆர் திட்டத்தின் படி, இந்த திட்டம் ஏப்ரல் 2023 க்குள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும், அப்போதுதான் 2026 க்குள் முடிக்க முடியும். ஆனால் திட்டம் தொடங்குவதே தாமதமாகி உள்ளது. மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணி கூட இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் இந்த திட்டம் எப்போதுதான் தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது,.

இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் மக்கள் அடுத்த 3 வருடத்திற்கு ஒன்று பேருந்தில் செல்ல வேண்டும், அல்லது மின்சார ரயிலில் செல்ல வேண்டும் இல்லையென்றால் மெட்ரோவில் ஏர்போர்ட்டில் இறங்கி அதன்பின் பேருந்து மாறி செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது.

கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளதால் மக்கள் கடுமையாக அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக வெளியூர் செல்லும் மக்கள் முன்பெல்லாம் எளிதாக கோயம்பேடு சென்றது போல இனி எளிதாக கிளாம்பாக்கம் செல்ல முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+