இன்னொரு நிர்பயா? அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி! மாணவியை நிர்வாணமாக்கி வீடியோ! போலீஸ் எடுத்த ஆக்சன்!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு அவரது ஆடைகளை களைந்து வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாணவி அளித்த அடையாளங்களின் அடிப்படையில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மற்றொருவரை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சென்னை நகரின் மையப் பகுதியான கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

அவர் அதே கல்லூரியில் மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் மறைவான இடத்தில் அந்த மாணவியும் அவரது காதலனும் பேசிக் கொண்டிருந்தனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை:
அப்போது அங்கு வந்த இரண்டு பேர் மாணவனை கடுமையாக தாக்கி விட்டு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதனை வீடியோவாக எடுத்து வைத்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகள்:
சம்பவம் நடந்த அன்று பல்கலைக்கழகத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் ஒருவரை பிடித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கல்லூரி மாணவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா அல்லது வெளி ஆட்கள் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒருவர் கைது:
இந்த நிலையில் மாணவி அளித்த அடையாளங்களின் அடிப்படையில் ஏற்கனவே விசாரித்து வந்த நபர் தான் அந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் மற்றொரு நபரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தலைவர்கள் கண்டனம்:
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி:
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்," சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் , இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது. டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் கழித்து, அதே போன்று ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடப்பது என்பது, சட்டம் ஒழுங்கை திரு. ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது" என கூறியுள்ளார்.
மாணவர்கள் போராட்டம்:
இதற்கிடையே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், குற்றவாளிகளில் மற்றொருவரை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்!












Click it and Unblock the Notifications