பெங்களூரில் டேட்டிங் ஆப் பயன்படுத்திய.. இளைஞருக்கு வந்த "சோதனை".. ஷாக்கடித்த சம்பவம்.. என்ன நடந்தது?
சென்னை:டேட்டிங் செயலிகள் மூலம் நடக்க கூடிய பெரிய மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பெங்களூரில் நடந்த மோசடி ஒன்று மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்களுக்கு விவாகரத்து வழக்குகளில் உதவும் தீபிகா பரத்வாஜ் நாராயணன் என்பவர் இது தொடர்பாக செய்துள்ள புகாரில்,
டேட்டிங் செயலி ஒன்றின் மூலம் பெங்களூரை சேர்ந்த எம்பயர் வெளியிட விரும்பா ஆண் பெண்ணை ஒருவரை சந்திக்கிறார். அந்த பெண்ணோ காதல், திருமணம் வேண்டாம். வெறுமனே பாலியல் உறவு மட்டும் வைத்துக்கொள்வோம் என்று கூறியுள்ளார்.

இதில் நடக்கும் மோசடிகள் பற்றி தெரிந்த அந்த பையன் ஆபத்தை உணர்ந்து.. அதற்கு மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பெண்.. அந்த நபரிடம் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கேட்க ஆரம்பிக்கிறாள். அதோடு இல்லாமல் இப்போது அவன் தன்னை வந்து சந்திக்கும்படி கட்டாயப்படுத்தி மெசேஜ்களை அவள் அனுப்பி வந்துள்ளார். முக்கியமான தீவிர பாலியல் மெசேஜ்களை அனுப்பி அவனை தூண்ட முயன்று வந்துள்ளார். இதனால் அச்சம் அடைந்த அந்த இளைஞர் புகார் கொடுக்க போலீசாரிடம் சென்றார், ஆனால் இதுபோன்ற வழக்குகளில் எப்போதும் என்ன நடக்கும் என்று போலீசார் அந்த இளைஞரிடம் விளக்கி சொன்னார்கள் - அதன்படி அவள் உங்கள் மீது புகார் செய்தால் நாங்கள் உங்களை கைது செய்ய வேண்டும், எனவே நீங்கள் உண்மையில் புகார் செய்ய விரும்புகிறீர்களா?
பையன் தனது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே உறுப்பினர் என்பதால் முழு மன அதிர்ச்சியில் இருக்கிறார். அந்த அனுப்பிய செய்திகளை நான் பார்த்திருக்கிறேன், அவை மிகவும் வெளிப்படையான பாலியல் எண்ணம் கொண்ட மெசேஜ்கள் மற்றும் அச்சுறுத்தும் வகையில் உள்ளன. அந்த நபருக்கு முதலில் பாலியல் ரீதியாக மெசேஜ் அனுப்பி வர வைப்பது.
அதன்பின் பாலியல் உறவு முடிந்ததும் பலாத்காரம் புகார் கொடுப்பேன் என்று கூறி காசு கேட்டு மிரட்டுவதுதான் அந்த பெண்ணின் திட்டமாக இருந்திருக்கும் என்று தீபிகா பரத்வாஜ் நாராயணன் தனது போஸ்டில் கூறியுள்ளார்.
டேட்டிங்; 90ஸ், 2கே கிட்ஸ்கள் இடையே சமீப நாட்களாக டேட்டிங் செயலிகள் பயன்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ளது. டேட்டிங் ஆப்களில் பலர் சமீப நாட்களாக இணைந்து, தங்கள் வாழ்க்கை துணை அல்லது காதலை தேட தொடங்கி உள்ளனர்.
டேட்டிங் செயலிகள்: இந்தியாவில் ஓகே கியூபிட், பம்ப்பிள், டின்டர், ட்ருலீ மேட்லி, ஐஸில், ஹின்ச் என்று பல டேட்டிங் ஆப்கள் உள்ளன. இந்த ஆப்கள் எல்லாம் தங்களுக்கு என்று தனி தனி விதிகளை வைத்துள்ளன. ஆனால் இதன் ஒரே நோக்கம், உங்களுக்கான இணையை, காதலரை, அல்லது டேட்டிங் செய்ய நண்பரை தேடிக்கொடுப்பதுதான். லாக்டவுன் காலத்தில் தனியாக இருக்கும் பலர் தற்போது டேட்டிங் ஆப்களை நாட தொடங்கி இப்போது அந்த செயலிகள் பயன்பாடு உச்சம் தொட்டுள்ளது. .
இன்ஸ்ட்டா ரீல்ஸ்: டேட்டிங் செயலிகள் மூலம் நடக்க கூடிய பெரிய மோசடி ஒன்றை பற்றி இன்ஸ்டாகிராமில் வரும் ரீல்ஸில் பெண் வழக்கறிஞர் ஒருவர் விளக்கி உள்ளார். அந்த வீடியோவில் பேசும் தேய்ஷா கபூர் என்று வழக்கறிஞர், இன்று நான் ஒரு பெண்ணின் வழக்கை எதிர்கொண்டேன், அவளும் அவளுடைய காதலனும் ஹிஞ்ச் என்ற டேட்டிங் செயலியில் சந்தித்ததாகக் குற்றம் கூடினர்., அதன் மூலம் அவர்கள் ஒருவரையொருவர் அறிந்துகொண்டார்கள்.
பின்னர், அவர்கள் ஒன்றாக வாழ்ந்து பல சந்தர்ப்பங்களில் உடலுறவு கொண்டனர். தற்போது தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த பையன் கொடுத்த வாக்குறுதியின் பேரில் தான் பாலின உறவில் ஈடுபட்டதாக அந்த பெண் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடைசியில் தன்னை அந்த நபர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால்.. அவர் மீது பலாத்கார புகாரை அந்த பெண் பதிவு செய்துள்ளார். அந்த நபர் மீது போலீசார் தற்போது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார். இதனால் அந்த நபர் பலாத்காரம் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டு 16 மாதங்களுக்கும் மேலாக காவலில் இருந்தவர் தற்போது பெயிலில் வந்துள்ளார்.
எனவே, உங்கள் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், எந்தவொரு சாதாரண உறவிலும் நுழைவதற்கு முன்பு கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்வதற்காகவும் இந்த சிறிய வீடியோவை நான் செய்துள்ளேன். இதில் நான் இருவரையும் குற்றம் சொல்லவில்லை. அதே சமயம் நீங்கள் டேட்டிங் போகிறேன் என்று ஒரு பெண்ணுடன் உடலுறவு அவரின் சம்மதத்துடன் கொண்டால் கூட.. அதன்பின் நீங்கள் திருமணம் செய்யவில்லை என்றால் உங்கள் மீது பலாத்கார புகார் வைக்கப்படலாம்.
நீங்கள் திருமணத்திற்கு வாக்குறுதி கொடுக்காமல்.. தொடக்கத்தில் இருந்தே அது casual dating ஆக இருந்தாலும் கூட உங்களிடம் பணம் பறிக்க சிலர் இப்படி புகார் கொடுக்கலாம். டெல்லியில் ஒரு பெண், ஒரு போலீஸ், வழக்கறிஞர் சேர்ந்து இப்படி பலரிடம் கோடி கோடியாக ஏமாற்றி உள்ளனர்.
அதனால் டேட்டிங் செயலி மூலம் பெண்களிடம் பழகினால் கவனமாக இருக்கவும். பெண்களும் திருமணம் செய்வதாக சொல்லும் எல்லா ஆண்களையும் நம்பிவிட வேண்டாம் என்று, அந்த ரீல்ஸில் கூறியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications