சோழிங்கநல்லூர் தனி மாநகராட்சி அல்லது தனி மாவட்டம்? இ சி ஆர் சரவணன் எம்எல்ஏ கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அல்லது தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். 7 ஊராட்சிகள் செங்கல்பட்டிலும் 20 வார்டுகள் சென்னை மாநகராட்சியிலும் இருப்பதால் இரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் சென்று மக்கள் அவதியடையும் சூழ்நிலை உள்ளது என சோழிங்கநல்லூர் தொகுதி தவெக எம்எல்ஏ ஈசிஆர் சரவணன் கோரிக்கை வைத்துள்ளார்.

சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 7 ஊராட்சிகள் செங்கல்பட்டு மாவட்டத்தின் வரம்பிலும், 20 வார்டுகள் சென்னை மாநகராட்சியின் (சென்னை மாவட்டம்) வரம்பிலும் வருகிறது. சோழிங்கநல்லூரில் பாதிக்கு பாதி செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் சென்னை மாநகராட்சி என்று மாறி மாறி இருக்கிறது.

Sholinganallur

இதனால் சோழிங்கநல்லூரில் வசிக்கும் மக்கள் சான்றிதழ்கள் பெற, பட்டா மாற்றம் செய்ய, அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்ந்த பணிகளுக்குச் செல்ல வேண்டுமென்றால், ஒரு தரப்பு மக்கள் செங்கல்பட்டுக்கும், மற்றொரு தரப்பு மக்கள் சென்னைக்கும் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

அதுமட்டுமல்ல சென்னையில் ஐடி காரிடர் என்றால் அது சோழிங்கநல்லூர் தான்.. ஏராளமான ஐடி நிறுவனங்கள் அந்த பகுதியில் உள்ளன. ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் பகுதிகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. எனவே இங்கு புதிதாக குடியேறும் மக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.. அதேபோல் அவர்களுக்கு தேவையான வசதிகளும் அதிக அளவில் செய்ய வேண்டியது உள்ளது. இதனால் உள்ளாட்சி மற்றும் மாநகராட்சிப் பணிகளின் போது அதிகார வரம்பு யார் வசம் என்பதில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது .

இந்த சூழலில் தான் சோழிங்கநல்லூர் தொகுதி தவெக எம்எல்ஏ ஈசிஆர் சரவணன் சட்டசபையில் பேசும் போது, சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அல்லது தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். 7 ஊராட்சிகள் செங்கல்பட்டிலும் 20 வார்டுகள் சென்னை மாநகராட்சியிலும் இருப்பதால் இரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் சென்று மக்கள் அவதியடையும் சூழ்நிலை உள்ளது என்று கூறினார்.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன், "சோழிங்கநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சில கிராமங்கள் ஏற்கனவே பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் தாலுகா மற்றும் சென்னை மாவட்டத்தின் கீழ் தான் வருகின்றன. மேலும் இவை சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டவை. அதனால், சோழிங்கநல்லூருக்கு என்று தனியாக ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள் வராத கிராமங்களை, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அருகிலுள்ள வேறு தொகுதியோடு இணைக்கலாம்; அல்லது நிலவியல் மற்றும் நிர்வாக வசதிக்கேற்ப அவற்றை சென்னை மாநகராட்சியின் கீழேயே கொண்டு வரலாம். இப்படிச் செய்வதன் மூலம் நிர்வாக ஒருங்கிணைப்பு மேம்படுவதோடு, தனியாக ஒரு மாவட்டத்தை உருவாக்கும் தேவையற்ற செலவுகளையும் அலைச்சல்களையும் தவிர்க்க முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+