Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏசி போட்டாலும் 4000 ரூபாய் மின்சார பில்.. 'பூஜ்ஜியம்' ஆக வேண்டுமா? நிபுணர்கள் சூப்பர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏசி பயன்படுத்தும் வீடுகளில் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க சோலார் ஒரு மிகச்சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது. குறிப்பாகக் கோடைக் காலங்களில் ஏசியின் பயன்பாடு அதிகமாக இருக்கும்போது, சோலார் பேனல்கள் உங்களுக்குப் பெரும் லாபத்தைத் தரும். உதாரணமாக உங்கள் மின்சார பில் இரண்டு மாதம் ஒரு முறை 4000 வருகிறது என்றால், உங்களுக்கு வெறும் 100 ரூபாய் என்கிற அளவில் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் 20 ஆண்டுக்கு மின் கட்டணமே வராது.. அந்த அளவிற்கு பயனுள்ளதாக சோலார் இருக்கும்.

கோடைக்காலம் தொடங்கிவிட்டது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்பட பல்வேறு வடமாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. பலர் இரவில் மட்டுமல்ல பகலிலேயே இப்போது ஏசி பயன்படுத்துவதை விரும்புகிறார்கள்.

Should the electricity bill of Rs 4000 be zero even if you turn on AC Experts explains

அவர்களின் மின் கட்டணம் தொடர்பாக சோலார் நிபுணர்கள் கூறும் போது , "நல்ல வெயில் அடிக்கும் பகல் நேரத்தில் தான் ஏசி நமக்கு அதிகம் தேவைப்படும். பொதுவாக சோலார் பேனல்கள் எப்போது அதிக மின்சாரத்தைத் தயாரிக்கும் என்றால், அதே வெயில் நேரத்தில்தான். எனவே, பகல் நேரத்தில் ஏசி ஓடுவதற்குத் தேவையான மின்சாரத்தை சோலார் பேனல்களே நேரடியாகத் தயாரித்து வழங்கிவிடும். இதனால் மின் வாரியத்திடம் இருந்து நீங்கள் பெறும் மின்சாரத்தின் அளவு பெருமளவு குறைந்துபோய்விடும்.

எனவே பெரும்பாலான வீடுகளுக்கு ஆன்-கிரிட் சோலார் சிஸ்டம் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். பகலில் சோலார் தயாரிக்கும் மின்சாரம் உங்கள் வீட்டுப் பயன்பாட்டிற்குப் போக மீதம் இருந்தால், அது மின் வாரியத்திற்குச் செல்லும் . இரவில் நீங்கள் ஏசி போடும்போது, பகலில் நீங்கள் கொடுத்த மின்சாரத்திற்கு ஈடாகக் கட்டணத்தில் கழிவு கிடைக்கும். இதன் மூலம் ஒட்டுமொத்த மாதக் கட்டணத்தைக் குறைக்க முடியும்.

யாருக்கு எவ்வளவு எவ்வளவு கிலோவாட் தேவை என்பதை பார்ப்போம்,. நீங்கள் உங்கள் வீட்டில் 1.5 டன் இன்வெர்ட்டர் ஏசி வைத்திருக்கிறீர்கள் என்றால், குறைந்தது 3kW சோலார் சிஸ்டம் அமைப்பது நல்லது. இது ஒரு நாளைக்குச் சராசரியாக 12 முதல் 15 யூனிட்கள் வரை மின்சாரத்தைத் தயாரிக்கும். இது ஒரு ஏசி மற்றும் வீட்டின் மற்ற தேவைகளுக்குப் போதுமானதாக இருக்கும்.

ஏன் இன்வெர்ட்டர் ஏசி சிறந்தது என்றால், சாதாரண ஏசியை விட இன்வெர்ட்டர் ஏசிகள் சோலார் உடன் இணையும்போது அதிகத் திறனுடன் செயல்படும். இவை மின்சாரத்தை ஒரே சீராகப் பயன்படுத்துவதால் சோலார் சிஸ்டத்தின் மீது அதிக சுமை விழாது. சோலார் அமைக்க ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை செலவாகும் என்றாலும், அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் நீங்கள் மிச்சப்படுத்தும் மின்சாரக் கட்டணம் மூலமாக அந்த முதலீட்டைத் திரும்பப் பெற்றுவிடலாம். அதன் பிறகு அடுத்த 20 ஆண்டுகளுக்கு உங்களுக்கு மின்சாரம் கிட்டத்தட்ட இலவசம் போல் தான் இருக்கும்.

அதேநேரம் சோலார் அமைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டின் கூரையில் நிழல் விழாத இடவசதி இருக்க வேண்டும். அரசு வழங்கும் மானியம் குறித்து விசாரித்து அமைத்தால் செலவு பெருமளவு குறையும். அரசு பல ஆயிரம் ரூபாய் வரை மானியம் தருகிறது. பொதுவாகவேபகல் நேர ஏசி பயன்பாடு அதிகம் உள்ள வீடுகளுக்குச் சோலார் ஒரு வரப்பிரசாதம் ஆகும. இது உங்கள் இபி பில்லை 70% முதல் 90% வரை குறைக்க நிச்சயம் உதவும்.

உதாரணத்திற்கு உங்கள் வீட்டிற்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 4,000 ரூபாய் மின்சாரக் கட்டணம் வருகிறது என்றால், தமிழ்நாடு மின் வாரியத்தின் தற்போதைய கட்டண விகிதப்படி நீங்கள் தோராயமாக 500 முதல் 550 யூனிட்கள் வரை பயன்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம் ஒரு 3 kW (கிலோவாட்) ஆன்-கிரிட் (On-Grid) சோலார் சிஸ்டம் அமைத்தால் உங்கள் கட்டணம் எப்படி குறையும் என்பதை ஒரு கணக்கீடாகப் பார்ப்போம்:

1 kW சோலார் பேனல் ஒரு நாளைக்குச் சராசரியாக 4 யூனிட் மின்சாரத்தைத் தயாரிக்கும். அப்படியானால், 3 kW சிஸ்டம் ஒரு நாளைக்கு 12 யூனிட் தயாரிக்கும்.ஒரு மாதத்திற்கு (30 நாட்கள்): 12 யூனிட்டுகள். 30 நாளில் 360 யூனிட்கள் தயாரிக்கும். இரண்டு மாதத்திற்கு 72 யூனிட்கள் உற்பத்தியாகும.

உங்கள் தற்போதைய பயன்பாடு என்றால் 550 யூனிட்கள் (2 மாதத்திற்கு). சோலார் உற்பத்தி செய்யும் திறன்: 720 யூனிட்கள் (2 மாதத்திற்கு). இங்கே கவனித்தால், உங்கள் தேவைக்கு அதிகமான மின்சாரத்தையே சோலார் உற்பத்தி செய்கிறது. எனவே நீங்கள் 'ஆன்-கிரிட்' முறையில் இணைக்கும்போது, நீங்கள் பயன்படுத்தியது போக மீதமுள்ள மின்சாரம் மின் வாரியத்திற்குச் செல்லும்.

உங்கள் பயன்பாடு (550) - சோலார் உற்பத்தி (720) = -170 யூனிட்கள். அதாவது, நீங்கள் மின் வாரியத்திடம் இருந்து மின்சாரம் வாங்கத் தேவையில்லை, மாறாக நீங்கள் அவர்களுக்குக் கூடுதல் மின்சாரத்தைக் கொடுத்துள்ளீர்கள்.எ சோலார் அமைத்த பிறகு உங்கள் மின்சாரக் கட்டணம் "பூஜ்யம்" (Zero Bill) ஆக மாற அதிக வாய்ப்புள்ளது. ஆனாலும், மின் வாரியம் வசூலிக்கும் நிலையான கட்டணம் (Fixed Charges/Service Charges) மற்றும் இதர வரிகள் என ஒரு சிறிய தொகை (தோராயமாக 100 முதல் 300 ரூபாய்) மட்டும் வரக்கூடும்" என்று சோலார் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+