ஏடிஎம்மில் பணம் எடுத்ததும்.. இதை மட்டும் மறக்காம பண்ணுங்க.. ஆர்பிஐ சொன்ன அட்வைஸ்.. ஜாக்கிரதை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்களுக்கு என்று முக்கியமான அறிவுரை ஒன்றை ஆர்பிஐ வழங்கி உள்ளது.

இந்தியா முழுக்க யூபிஐ பயன்பாடு தற்போது உச்சம் தொட்டுள்ளது. உலகில் அதிக அளவில் யுபிஐ பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

Should you have to press the close button after taking money from ATM?

அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்போதுதான் வென்மோ போன்றவைகளின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா காலத்தில் இருந்தே யுபிஐ பயன்பாடு உச்சத்தில் உள்ளது.

முக்கியமாக இந்தியாவில் பணமதிப்பிழப்பு நீக்கம் செய்யப்பட்ட பின் இந்த யுபிஐம் பரிவர்த்தனை அதிகரித்து உள்ளது. அனைத்து விதமான சேவைகளுக்கும் தற்போது யுபிஐ பயன்பாடு வந்துவிட்டது. பெரிய பெரிய நிறுவனங்கள் தொடங்கி சாதாரண சாலையோர கடைகளுக்குகூட யுபிஐ வந்துவிட்டது. அதேபோல் பெரிய பெரிய அரசு நிறுவனங்கள் கூட யுபிஐ பயன்பாட்டை தொடங்கிவிட்டன. இன்னொரு பக்கம் ஆன்லைன் பேமெண்ட் அனைத்தும் தற்போது யுபிஐ சேவையை வழங்குகின்றன. மக்கள் யுபிஐ பயன்பாட்டை வெகுவாக விரும்ப தொடங்கிவிட்டனர்.

சமீபத்தில் யுபிஐ மூலம் பிபிஐ மோடில் வணிக பரிவர்த்தனைக்கு பணம் அனுப்பினால் கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிபிஐ மோடில், அதாவது வேலட்டில் இருந்து 2000ன் ரூபாய்க்கு மேல் பிபிஐ முறையில் பணம் அனுப்பினால் இந்த கட்டணம் பொருந்தும். இந்த நிலையில் மக்கள் பலர் மீண்டும் ஏடிஎம் மூலம் பணம் எடுத்து கேஷ் கொடுத்து பரிவர்த்தனை செய்ய தொடங்கி உள்ளனர்.

முக்கியமாக பேருந்துகளில் செல்பவர்கள் தொடங்கி பலர் யுபிஐ பயன்படுத்த முடியாத என்பதால் அவர்கள் கேஷ் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்களுக்கு என்று முக்கியமான அறிவுரை ஒன்றை ஆர்பிஐ வழங்கி உள்ளது.

அதன்படி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது பின்னால் யாரும் பாஸ்வேர்டை பார்க்கிறார்களா என்று கவனமாக இருக்க வேண்டும். பாஸ்வேர்டை எக்காரணம் கொண்டு கார்டில் நியாபகத்திற்காக எழுதக்கூடாது. அதேபோல் ஏடிஎம்மில் உங்களுக்கு தெரியாதவர்களிடம் சொல்லி பணம் எடுத்து கொடுக்க கூடாது. அதேபோல் உங்களுக்கு தெரியாத நபர்களுக்கு நீங்கள் பணமும் எடுத்து கொடுக்க கூடாது.

அப்படி செய்யும் பட்சத்தில் நீங்கள் சரியாக பணம் எடுத்து கொடுத்தாலும் கூட.. நீங்கள் திருடிவிட்டதாக உங்கள் மீதே புகார்கள் கொடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. சில மோசடி கும்பல்கள் இப்படி சுற்றுவதால் பிறருக்கு பணம் எடுத்துக்கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் பலருக்கும்.. பணம் எடுத்ததும் ஏடிஎம்மில் கேன்சல் செய்ய வேண்டுமா என்ற கேள்வி உள்ளது. இதற்கு ஆர்பிஐ பதில் அளித்துள்ளது. பொதுவாக ஏடிஎம்மில் பணம் எடுத்ததும் உங்கள் தகவல் அதில் அளிக்கப்படும். அதனால் கேன்சல் கொடுக்க வேண்டியது இல்லை. தானாக கேன்சல் ஆகி அதுவாகவே ஹோம் பேஜுக்கு வரும்.

ஆனால் சில ஏடிஎம்களில் பணம் எடுத்த பின் பேலன்ஸ் பார்க்கும் வசதியும், லோன் எடுக்க அப்ளே செய்யும் வசதியும் காட்டும். இதை கவனிக்காமல் சிலர் கிளம்பி சென்று விடுவார்கள். இதனால் பாதுகாப்பிற்கு எந்த ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் கேன்சல் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்துவிட்டு மீண்டும் ஹோம் பேஜ் வருகிறதா என்று சோதனை செய்துவிட்டு, பணம் கார்டை மறக்காமல் எடுத்துவிட்டு அங்கிருந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+