3 கட்சி.. 3 மாஸ்டர்மைண்ட்.. தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சியையே இவங்கதான் தீர்மானிக்க போறாங்க.. ட்விஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக இரண்டு தேர்தல் ஆலோசகர்களை நியமிக்க உள்ளதாம். அதேபோல் தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் தேர்தல் ஆலோசகர் ஒருவரை நியமிக்க போவதாக கூறப்படுகிறது.
அதிமுக ஆலோசனை:
அதிமுக பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளதாம். பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் பிரஷாந்த் கிஷோர் இப்போது வெளிப்படையாக பணிகளை செய்வது இல்லை. அவரின் நிறுவனம் மட்டுமே பணிகளை செய்கிறது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் இப்போதும் பிரஷாந்த் கிஷோர்தான்.

அவர் நேரடியாக பணிகளை செய்ய மாட்டார். ஏனென்றால் அவர் தனியாக அரசியல் கட்சி நடத்தி வருகிறார். ஆனாலும் பிரஷாந்த் கிஷோர்தான் தேர்தல் திட்டங்களை ஐபேக் நிறுவனத்திற்காக வகுத்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த நிறுவனத்துடன் எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே இதற்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடைபயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2009ல் அப்பாவின் மரணத்திற்கு பின் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பாதாளத்தில் இருந்தது. அதன்பின் அவர் நடத்திய யாத்திரை.. அரசியல் செயல்பாடுகள் அவரின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. கிரவுண்டு பணிகளை செய்தது.. மக்களிடம் தொடர்ந்து நெருக்கமாக இருக்கும் வகையில் முடிவுகளை எடுத்தது.. திட்டமிட்டு ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டது என்று ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
அவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ஜெகன் மோகனின் பாதயாத்திரைதான். அதை செய்ய காரணம் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம்தான். தற்போது அதே பிரஷாந்த் கிஷோருடன் எடப்பாடி கைகோர்க்க உள்ளாராம்.
திமுக ஆலோசனை:
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்த Showtime நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Showtime நிறுவனம் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்தது. அங்கே சிவசேனாவுடன் இரண்டு பிரிவுகள் இடையே கடுமையான மோதல் நிலவியது. அதிலும் உத்தவ் தாக்ரேயின் சிவசேனா பிரிவே வலிமையாக இருந்தது. அதை மீறி ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்து அந்த கட்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அந்த நிறுவனத்துடன் ஆளும் திமுக ஆலோசனை செய்து வருகிறதாம்.
இதே அமைப்புதான் ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு சந்திரபாபு நாயுடுவிற்காக பணியாற்றியது. அங்கேயும் சந்திரபாபு நாயுடு வெற்றிபெற இந்த அமைப்பு காரணமாக இருந்தது. இதே குழுவுடன்தான் இப்போது திமுக ஆலோசனை செய்து வருகிறதாம்.
விஜய் ஆலோசனை:
நடிகர் விஜய்க்கு பின் ஆலோசகராக இருப்பது ஜான் ஆரோக்கியசாமி என்ற அரசியல் ஆலோசகர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசியலில் மீண்டும்.. நீண்ட நாட்களுக்கு பின் ஆக்டிவ் ஆகி இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் ஜான் ஆரோக்கியசாமி. திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி ஏற்கனவே பாமகவிற்கு தேர்தல் பணிகளை செய்துள்ளார்.
ஜான் ஆரோக்கியசாமி பாமகவின் பிரபலமான.. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி பிரச்சாரத்தை முன்னெடுத்தார். பாமக அந்த தேர்தலில் சறுக்கினாலும்.. ஜான் ஆரோக்கியசாமி முன்னெடுத்த அந்த பிரச்சாரம் இப்போதும் பிரபலம். வெளிநாடுகளில் பல நிறுவனங்களில் வேலை பார்த்த ஜான் ஆரோக்கியசாமி திருச்சிக்காரர்.
இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு பின் ஆலோசகராக இருப்பது ஜான் ஆரோக்கியசாமிதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் அதன் தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. இதை எல்லாம் செதுக்கியது அவர்தான் என்று கூறப்படுகிறது.
திராவிட கட்சிகளுக்கு மாற்றமாக பாமகவை அப்போது கொண்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி அதை பெரிய அளவில் டிரெண்ட் செய்தார். வடக்கிலும் கூட இவர் தேர்தல் பணிகளை செய்துள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் பணிகளை செய்த ஜான் ஆரோக்கியசாமி.. தேசியவாத காங்கிரஸ் அங்கே கடந்த தேர்தலில் அதிக இடங்களை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
தற்போது ஜான் ஆரோக்கியசாமிதான் விஜய்க்கு பின் இருக்கும் அந்த மாஸ்டர்மைண்ட். கட்சி பணிகளை புஸ்ஸி ஆனந்த் கவனித்தாலும்.. வியூக வகுப்புகளை கவனிப்பது என்னவோ ஜான் ஆரோக்கியசாமிதான் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications