அய்யோ அந்த இரண்டு பேரா? பயங்கரமான ஆளாச்சே.. சிஎஸ்கேவுக்கு தலைவலி.. யார் அவர்கள் ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுவரை ஐபிஎல் தொடரில் மூன்று முறை குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியும் ஒருமுறை கூட சிஎஸ்கே அணி வென்றதில்லை. இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணிக்கு தலைவலியாக அமையப் போகும் வீரர்கள் யார் என்பது குறித்து ரசிகர்களிடையே விவாதமே நடந்து வருகிறது.

சென்னை அணி பேட்டிங் வரிசையில் மிகவும் பலமாக இருக்கிறது. ஆனால் பந்துவீச்சில் பெரிய அளவில் பலமாக இல்லை.சரியான சீனியர் வீரர்கள் இல்லை. இது சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் குஜராத் அணியோ பேட்டிங், பந்து வீச்சு என எல்லாவற்றிலும் அபாரமாக இருக்கிறது.

Shubman gill vs Rashid khan : Which players are going to be a headache for CSK in todays match?

குஜராத் அணி பழைய ஆஸ்திரேலிய அணி போல் மிகவும் பலமாக இருக்கிறது. அந்த அணியில் முதல் ஆள் தொடங்கி 11 வது ஆள் வரை யாராவது ஒருவர் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து தூக்கிநிறுத்துகிறார்கள். கூட்டு முயற்சி காரணமாக பெரிய வெற்றிகளை பெற்று வருகிறது குஜராத் டைட்டன்ஸ் அணி.

இந்நிலையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைவலியை தரப்போகும் வீரர் யார் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.குஜராத் அணியில் மிக முக்கியமான வீரரர்க பார்க்கப்படுபவர் சுப்மன் கில். இவர் தான் பல போட்டிகளில் குஜராத் அணி வெல்ல காரணமாக இருந்தவர். இந்ததொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் 14 இன்னிங்சில் 680 ரன்கள் குவித்திருக்கிறார்.

சுப்மன் கில் குஜராத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், துருப்பு சீட்டாகவும் பார்க்கப்படுகிறார். இவர் சென்னை அணிக்கு இன்று பெரிய தலைவலியாக மாற வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். இதனிடையே மற்றொரு தரப்பு ரசிகர்கள் ரஷித் கான் தான் சென்னை அணிக்கு சவலான வீரராக இன்று இருப்பார் என்று கூறுகிறார்கள். ஷேவாக் கூட ரஷீத்கான் தான் குஜராத் டைட்டன்ஸ் அணியின் துருப்பு சீட்டு என்று பாராட்டினார்.

Shubman gill vs Rashid khan : Which players are going to be a headache for CSK in todays match?

ஷேவாக் கூறும் போது, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரஷித் கான் தான் துருப்புச்சீட்டாக இருப்பார்.விக்கெட்டை வீழ்த்துவதில் சிறப்பாக செயல்படுகிறார். ஹர்த்திக் பாண்ட்யா ரஷித் கானை சூப்பராக பயன்படுத்துகிறார். ரஷித் கான் தனது பந்து வீச்சு மூலம் பார்ட்னர்ஷிப்புகளை முறியடிக்க விரும்புகிறார். அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தற்போது இந்த சீசனின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக மாறி இருக்கிறார் என்றார்.

பந்து வீச்சில் மிரட்டி வரும் ரஷித் கான் இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 23 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். மும்பை அணிக்கு எதிராக 8வது ஆளாக களம் இறங்கி 79 ரன்கள் குவித்தார். பேட்டிங்கிலும் அபாராமாக விளையாடுகிறார். எனவே ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித்கான், குஜராத் அணியின் துருப்பு சீட்டாகவும், சென்னை அணிக்கு தலைவலியாகவும் இருப்பார் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+